லயன்ஸ் கழகங்களின் ஆளுநரின் ஆலோசகராக றஜீவன் நியமனம் - Yarl Voice லயன்ஸ் கழகங்களின் ஆளுநரின் ஆலோசகராக றஜீவன் நியமனம் - Yarl Voice

லயன்ஸ் கழகங்களின் ஆளுநரின் ஆலோசகராக றஜீவன் நியமனம்



இலங்கை லயன்ஸ் கழகங்களின் (District 306B1)  2020/2021 ஆண்டுக்கான புதிய ஆளுநர் லயன்தேசபந்து அல்ஹாஜ் ராசிக் அவர்களின் ஆளுநர் சபையில் (Cabinet) லயன் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி MAF, JP கழகங்களின் சேவை மதிப்பீடு மற்றும் விசேட செயற்திட்டங்களின் ஆளுநரின் ஆலோசகராக  (DISTRICT GOVERNOR’S CONSULTANT - CLUB EVALUATION PERFORMANCE & SPECIAL PROJECTS) நியமிக்கப்பட்டுள்ளார்.

லயன்ஸ் கழகங்களின் செயற்பாடுகள் தொடர்பாக ஆழமான அறிவைக் கொண்டு இளம் வயதில் நல்ல தலைமத்துவத்தை வழங்கி வரும் லயன் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி லயன்ஸ் கழகங்கள் வழங்கும் பல சர்வதேச, உள்நாட்டு தலைமத்துவப் பாடநெறிகளைப் பூர்த்தி செய்த விரல்விட்டு எண்ணக்கூடியவர்களில் ஒருவராவர்.

லயன்ஸ் கழகங்களின் மிக முக்கியமான கற்கைநெறிகளான RLLI (Regional Lions Leadership Institute) கொழும்பிலும் ALLI (Advanced Lions Leadership Institute) நேபாளத்தின் தலைநகர் காத்மண்டுவிலும் CWTIEL (PID Lion Chuck Wijenathen Training Institute for Emerging Leaders) கொழும்பிலும் சிறப்பாக பயின்றவர் ஆவார்.
மேலும் இவர் MAF (Member of Amarasuriya fund) உறுப்பினரும் ஆவார்.

2010 ஆம் ஆண்டு லயன்ஸ் கழகத்தில் இணைந்து கழக தலைவர், வலயத் தலைவர், பிராந்திய தலைவர் என தொடர்ச்சியான தலைமத்துவத்தை இலங்கை லயன்ஸ் கழகங்களுக்கு வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தனது சேவைக்காலத்தில் வடக்கு மாகாணத்தில் கிளிநொச்சி லயன்ஸ் கழகம் மற்றும் யாழ்ப்பாணம் சிற்றி லயன்ஸ் கழகம் ஆகியவற்றை சிறப்பாக தொடங்கி வைத்தவர் என்பதுடன் யாழ் சிற்றி லயன்ஸ் கழகத்தின் சிறந்த உறுப்பினராகவும் செயற்பட்டு வருகின்றார்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post