மிகப்பெரிய பிரித்தானிய மோட்டார் சைக்கிள் உற்பத்தி நிறுவனம் 400 பேரை ஆட்குறைப்பு செய்கிறது! - Yarl Voice மிகப்பெரிய பிரித்தானிய மோட்டார் சைக்கிள் உற்பத்தி நிறுவனம் 400 பேரை ஆட்குறைப்பு செய்கிறது! - Yarl Voice

மிகப்பெரிய பிரித்தானிய மோட்டார் சைக்கிள் உற்பத்தி நிறுவனம் 400 பேரை ஆட்குறைப்பு செய்கிறது!

மிகப்பெரிய பிரித்தானிய மோட்டார் சைக்கிள் உற்பத்தி நிறுவனம், 400 பேரை ஆட்குறைப்பு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

லீசெஸ்டர்ஷையரின் ஹின்க்லியை தளமாகக் கொண்ட ட்ரையம்ப் (Triumph) மோட்டார் சைக்கிள் உற்பத்தி நிறுவனம், உலகெங்கிலும் பணியாற்றும் 2,500 பேரில் 400 பேரை ஆட்குறைப்பு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த பணி நீக்கங்களில் பிரித்தானியாவில் உள்ள 240பேர் இடம்பெறுவார்கள் என ட்ரையம்ப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த மூன்று மாதங்களில் சில நாடுகளில் மோட்டார் சைக்கிள் விற்பனை 65 சதவீதம் வரை குறைந்துள்ளது.

இதுகுறித்து தலைமை நிர்வாகி நிக் ப்ளூர் கூறுகையில், ‘இந்த நெருக்கடி உலகளாவிய மோட்டார் சைக்கிள் சந்தையில் குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இது நிறுவனத்திற்கு சவாலான நேரம்.

குறிப்பாக தனிநபர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் போது இவை எளிதான முடிவுகள் அல்ல. இருப்பினும், கொவிட்-19 தாக்கத்திற்கு மத்தியில் ட்ரையம்ப்பின் வியாபார அடையாளம் மற்றும் வணிகத்தின் நீண்டகால ஆரோக்கியத்தையும் வெற்றிகளையும் பாதுகாப்பதற்காக மறுசீரமைக்க வேண்டும்’ என கூறினார்.

பிரான்ஸ், இத்தாலி, ஜேர்மனி, அமெரிக்கா மற்றும் பிரித்தானிய ஆகிய நாடுகளில் 500 சிசி பிளஸ் மோட்டார் சைக்கிள் பிரிவில் விற்பனை உச்ச பருவத்தில் 40 சதவீதம் முதல் 65 சதவீதம் வரை குறைந்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post