யாழ் போதனா வைத்தியசாலைக்கு இருதய சத்திரசிகிச்சை நிபுணர் நியமனம் .. - Yarl Voice யாழ் போதனா வைத்தியசாலைக்கு இருதய சத்திரசிகிச்சை நிபுணர் நியமனம் .. - Yarl Voice

யாழ் போதனா வைத்தியசாலைக்கு இருதய சத்திரசிகிச்சை நிபுணர் நியமனம் ..

யாழ் போதனா வைத்தியசாலைக்கு இருதய சத்திரசிகிச்சை நிபுணர் ஆர்.எம்.கன்னங்கரா (RM. Kannangara) நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை காலமும் கடமையாற்றிய இருதய சத்திரசிகிச்சை நிபுணர் முகுந்தன் அவர்கள் வருடாந்த  இடமாற்றத்தில் கொழும்பில் உள்ள சீமாட்டி மருத்துவமனையில் (Lady Ridgeway Hospital) கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

இருதய சத்திரசிகிச்சை சேவைகள் தடையின்றி தொடருவதுடன் வாரத்தில் செய்யப்படுகின்ற சத்திரசிகிச்சைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.
இதே சமயம் இதுவரை கடமையாற்றிய இருதய சத்திரசிகிச்சை நிபுணர் முகுந்தன் அவர்கள்  கடந்த வருடம்  நிரந்தர இடமாற்றத்திற்கு விண்ணப்பிக்கும் போது தனது சொந்த விருப்பத்தில் கொழும்பு சிமாட்டி மருத்துவ மனைக்கு  விண்ணப்பித்ததுடன் யாழ்.போதனா வைத்தியசாலையை முன்னிலைப்படுத்தி விண்ணப்பிக்கவில்லை.

வைத்தியர்கள் தமது குடும்பங்கள் வசிக்கின்ற பகுதிகளில் அருகில் இருக்கின்ற பொருத்தமான வைத்தியசாலைகளை பல்வேறு இதர காரணங்களுக்காக தெரிவு செய்து கொள்வதனை நிர்வாகத்தினால் தடுத்து நிறுத்த முடியாது.
ஆகவே இடமாற்றம் பெற்று செல்கின்ற போது அவர்களை வாழ்த்தி அனுப்புவதுடன் புதியவர்களை இணைத்து புதிய உத்வேகத்தில் வைத்தியசாலை சேவைகளை முன்னகர்த்தி செல்வது எமது முக்கிய பொறுப்பாகும்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post