பிரித்தானியா ரீடிங் நகரில் நடத்தப்பட்ட தாக்குதல் பயங்கரவாத தாக்குதல் அல்ல – சுகாதார அமைச்சர் - Yarl Voice பிரித்தானியா ரீடிங் நகரில் நடத்தப்பட்ட தாக்குதல் பயங்கரவாத தாக்குதல் அல்ல – சுகாதார அமைச்சர் - Yarl Voice

பிரித்தானியா ரீடிங் நகரில் நடத்தப்பட்ட தாக்குதல் பயங்கரவாத தாக்குதல் அல்ல – சுகாதார அமைச்சர்

3 பேர் உயிரிழந்த இங்கிலாந்தின் ரீடிங் நகரிலுள்ள போர்பரி பூங்காவில் இடம்பெற்ற கத்தி குத்து சம்பவத்தை பயங்கரவாத தாக்குதல் என கருதவில்லை என்று பிரித்தானிய சுகாதார அமைச்சர் மற் ஹன்கொக் தெரிவித்துள்ளார்.
நேற்று (சனிக்கிழமை) இங்கிலாந்தின் ரீடிங் நகரிலுள்ள போர்பரி பூங்காவில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக 25 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டான்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து பிபிசி தொலைக்காட்சிக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) வழங்கிய விசேட செவ்வியில் கருத்து தெரிவித்த அவர், ” இதை ஒரு பயங்கரவாத சம்பவமாக கருதப்படவில்லை, ஆனால் நிச்சயமாக நாங்கள் நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருகிறோம்” என தெரிவித்துள்ளார்.
இதேவேளை இனவெறிக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் பின்னணியில் இந்த கத்திக்குத்து சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என்ற ஊகங்கள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர், இனவெறிக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் மூன்று மணிநேரத்திற்கு முன்பே நிறைவடைந்துவிட்டது. மிகச் சிறப்பாக நடத்தப்பட்ட அமைதியான ஆர்ப்பாட்டம் இதுவாகும். எனவே இந்த சம்பவத்திற்கும் போராட்டத்திற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை” என கூறினார்.
இஸ்லாமிய மதம் மாறிய ஒருவர் கடந்த பெப்ரவரியில், தெற்கு லண்டனில் இரண்டு பேரைக் குத்திய சம்பவம் மற்றும் நவம்பரில் பயங்கரவாத குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்த மற்றொரு நபர் லண்டன் பிரிட்ஜில் இரண்டு பேரை குத்தி கொலை செய்த சம்பவங்கள் பிரித்தானிய மக்களை அச்சத்தில் ஆழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


[ads id="ads1"]

0/Post a Comment/Comments

Previous Post Next Post