தெற்கு மற்றும் மத்திய சோமாலியாவில் இருவேறு தாக்குதகள்; ஏழு பேர் உயிரிழப்பு - Yarl Voice தெற்கு மற்றும் மத்திய சோமாலியாவில் இருவேறு தாக்குதகள்; ஏழு பேர் உயிரிழப்பு - Yarl Voice

தெற்கு மற்றும் மத்திய சோமாலியாவில் இருவேறு தாக்குதகள்; ஏழு பேர் உயிரிழப்பு

கடந்த 24 மணி நேரத்தில் தெற்கு மற்றும் மத்திய சோமாலியாவில் நடைபெற்ற இரண்டு வெவ்வேறு குண்டுத் தாக்குதல்களில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மற்றும் இராணுவ அதிகாரிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்தனர்.
தலைநகர் மொகாடிஷுவிலிருந்து 90 கி.மீ. வடமேற்கே உள்ள வான்லவேன் நகரில் உள்ள இராணுவ அதிகாரி வீட்டின் முன் நேற்று (சனிக்கிழமை) குண்டு வெடித்ததில் இராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர்.
குறித்த தாக்குதலுக்கு எவ்வித அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இரண்டாவது சம்பவத்தில், மத்திய சோமாலியாவின் கால்முடுக் மாநிலத்தில் உள்ள பகாட்வெய்ன் நகரில் உள்ள இராணுவ சோதனைச் சாவடியில் காரில் மூன்று தீவிரவாதிகள் தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்தினர்.
வாகனத்தை நிறுத்துவதற்கான உத்தரவுகளை புறக்கணித்ததை அடுத்து குறித்த காரின் மீது படையினர் துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாகவும் இதன்போது மூன்று இராணுவ வீரர்கள் உயிரிழந்ததுடன் மேலும் இருவர் காயமடைந்தனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய அமைப்பான அல் ஷபாப், மத்திய அரசைக் கவிழ்க்க 12 ஆண்டுகால பிரசாரத்தை மேற்கொண்டுவரும் சோமாலியாவில் இத்தகைய தாக்குதல்கள் வழமையாக இடம்பெறுகின்றன என்றும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

0/Post a Comment/Comments

Previous Post Next Post