நடப்பதை கலக்கத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறோம் – கனேடிய பிரதமர் - Yarl Voice நடப்பதை கலக்கத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறோம் – கனேடிய பிரதமர் - Yarl Voice

நடப்பதை கலக்கத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறோம் – கனேடிய பிரதமர்

அமெரிக்காவில் நடப்பதைத் தாம் கலக்கத்துடன் பார்த்துக்கொண்டிருப்பதாகவும் இது மக்களை ஒருங்கிணைப்பதற்கும் அவர்களின் குரல்களைக் கேட்பதற்குமான நேரம் எனவும் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜோர்ஜ் ஃபிலாய்ட் என்பவரின் கழுத்தில் 9 நிமிடங்களுக்கு மேலாக தனது காலால் அழுத்தியமையினால் அவர் உயிரிழந்தார்.

அவரின் உயிரிழப்பை அடுத்து நீதி கோரி பலர் போராட்டத்தில் இறங்கினர். அமெரிக்காவின் பல மாகாணங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்ததுடன் அமெரிக்காவில் நிறவெறிக்கு எதிரான போராட்டத்தைக் கிளப்பியுள்ளது.

இந்த போராட்டங்களை அடக்க கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்தும் அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கு எதிரான விமர்சனங்களும் தற்போது வலுப்பெற்றுள்ளன. 

இந்நிலையிலேயே கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஜனாதிபதி ட்ரம்பை விமர்சித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post