தொண்டமானின் இறுசடங்கில் கலந்துகொண்ட ஊடகவியலாளர் உட்பட மூவர் தனிமைப்படுத்தப்பட்டனர் - Yarl Voice தொண்டமானின் இறுசடங்கில் கலந்துகொண்ட ஊடகவியலாளர் உட்பட மூவர் தனிமைப்படுத்தப்பட்டனர் - Yarl Voice

தொண்டமானின் இறுசடங்கில் கலந்துகொண்ட ஊடகவியலாளர் உட்பட மூவர் தனிமைப்படுத்தப்பட்டனர்

மறைந்த முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் இறுசடங்கில் கலந்துகொண்ட ஊடகவியலாளர் ஒருவருக்கும் அவருடன் தொடர்பிலிருந்த வாகன சாரதியும் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்கள் மூவரும் நேற்று முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என கொட்டகல பொதுசுகாதார பரிசோதகர் ஒருவர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் கொரோனா வைரஸ் தாக்கத்திற்குரிய அறிகுறிகள் காணப்படுவதாகவும் அவரை பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளதுடன் மூவரையும் 14 நாட்களிற்கு வீடுகளில் தனிமைப்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது என சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post