சாத்தான் குளம் விவகாரம் : நம்பிக்கை பிறந்துள்ளதாக சிதம்பரம் டுவீட்! - Yarl Voice சாத்தான் குளம் விவகாரம் : நம்பிக்கை பிறந்துள்ளதாக சிதம்பரம் டுவீட்! - Yarl Voice

சாத்தான் குளம் விவகாரம் : நம்பிக்கை பிறந்துள்ளதாக சிதம்பரம் டுவீட்!

சாத்தான் குளம் கொலை சம்பவ விவகாரத்தில் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளதாக முன்னாள் நிதிமைச்சர் பா.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தை சி.பி.ஐக்கு மாற்ற தமிழக அரசு தீர்மானித்துள்ளதை வரவேற்றுள்ள அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து ருவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள அவர்,  ‘தூத்துக்குடியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, காவலில் இருக்கும்போது மரணம் அடைந்த இரண்டு வர்த்தகர்களுக்கு  நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இப்பொழுது பிறந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

1996-ஆம் ஆண்டில் டி.கே.பாசு வழக்கில் உச்ச நீதிமன்றம் வகுத்த விதிகளை மத்திய,  மாநில காவல் துறைகள் பின்பற்றுவதில்லை என்பதே உண்மை எனத் தெரிவித்துள்ள அவர்.  சி.பி.ஐ விசாரணையை விட சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணை உகந்தது என்பது தனது தனிப்பட்ட கருத்து எனவும் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post