கொவிட்-19 முடக்கநிலை கட்டுப்பாடுகளை மேலும் எளிதாக்குகிறது கட்டார்! - Yarl Voice கொவிட்-19 முடக்கநிலை கட்டுப்பாடுகளை மேலும் எளிதாக்குகிறது கட்டார்! - Yarl Voice

கொவிட்-19 முடக்கநிலை கட்டுப்பாடுகளை மேலும் எளிதாக்குகிறது கட்டார்!

சுமார் 2.8 மில்லியன் மக்கள்தொகை கொண்ட வளைகுடா நாடான கட்டார், கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் கட்டுப்பாடுகளை மேலும் எளிதாக்குகிறது.

இதன்படி, எதிர்வரும் ஜூலை 1ஆம் திகதி முதல் உணவகங்கள், கடற்கரைகள் மற்றும் பூங்காக்களை மீண்டும் திறக்க அனுமதிக்கப்படுகின்றது.

அதிகபட்சமாக ஐந்து பேர் சம்பந்தப்பட்ட பொது மற்றும் தனியார் கூட்டங்கள் அனுமதிக்கப்படும் என்றும், 50 சதவீத திறனில் அலுவலகங்கள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படும் என்றும் நெருக்கடி நிர்வாகத்திற்கான உச்சக் குழு கூறுகிறது.

அடுத்த கட்டமாக குறைந்த ஆபத்துள்ள நாடுகளின் விமானங்கள் உட்பட சில கட்டுப்பாடுகள் ஒகஸ்ட் 1ஆம் திகதி தளர்த்த கட்டார், திட்டமிடப்பட்டுள்ளது.

கட்டாரில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால், புதிதாக 693பேர் பாதிப்படைந்துள்ளனர். 3பேர் உயிரிழந்துள்ளனர்.

இது கட்டாரில் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 95,106ஆக கொண்டு வருகின்றது. மேலும், மொத்தமாக 113பேர் உயிரிழந்துள்ளனர்.

14,823பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதில் 203 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. வைரஸ் தொற்றிலிருந்து 80,170பேர் மீண்டுள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post