இந்திய நடிகர்கள் வெட்கம் இல்லாமல் கபட நாடகம் ஆடுகின்றனர் – கங்கனா - Yarl Voice இந்திய நடிகர்கள் வெட்கம் இல்லாமல் கபட நாடகம் ஆடுகின்றனர் – கங்கனா - Yarl Voice

இந்திய நடிகர்கள் வெட்கம் இல்லாமல் கபட நாடகம் ஆடுகின்றனர் – கங்கனா

இந்திய நடிகர்கள் பெரும்பாலும் வெட்கமே இல்லாமல் கபட நாடகம் ஆடுபவர்கள் என நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.
இனவெறி தாக்குதலுக்கு எதிராக அமெரிக்காவில் பெரும் போராட்டம் இடம்பெற்று வருகிறது. இது குறித்து நடிகர்கள் பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கங்கனா இந்திய நடிகர்களை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில், “இவர்கள் கருப்பினத்தவர்களுக்கு எதிராக இனவெறி குறித்து பேசிக் கொண்டே சிவப்பழகு கிரீம்களுக்கு விளம்பரம் செய்து வருகின்றனர்.
மில்லியன் கணக்கான டாலர்கள் சிவப்பழகு கிரீம்கள் மூலம் சம்பாதித்துக்கொண்டு இனவெறி குறித்து இவர்கள் பேசுவதை ஏன் யாருமே கேள்வி கேட்பதில்லை” எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post