தேர்தலுக்கான திகதி மற்றும் விருப்ப எண் வழங்குவது குறித்து திங்கட்கிழமை முடிவு – மஹிந்த தேசப்பிரிய - Yarl Voice தேர்தலுக்கான திகதி மற்றும் விருப்ப எண் வழங்குவது குறித்து திங்கட்கிழமை முடிவு – மஹிந்த தேசப்பிரிய - Yarl Voice

தேர்தலுக்கான திகதி மற்றும் விருப்ப எண் வழங்குவது குறித்து திங்கட்கிழமை முடிவு – மஹிந்த தேசப்பிரிய

2020 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான திகதியை தீர்மானிக்க தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை கூடவுள்ளனர்.

இதனை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய சற்றுமுன்னர் அறிவித்துள்ளார்.

மேலும் வேட்பாளர்களுக்கான விருப்ப எண் வழங்குவது குறித்தும் எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இதேவேளை பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பாக சுகாதார வழிகாட்டுதல்களைப் பெற்றுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பான சுகாதார வழிகாட்டுதல்கள் இன்று தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post