ஈஸிஜெட் விமான நிறுவனம் தனது சேவையை மீண்டும் தொடங்கியது! - Yarl Voice ஈஸிஜெட் விமான நிறுவனம் தனது சேவையை மீண்டும் தொடங்கியது! - Yarl Voice

ஈஸிஜெட் விமான நிறுவனம் தனது சேவையை மீண்டும் தொடங்கியது!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று மீதான அச்சம் இன்னமும் முழுவதுமாக நீங்காத நிலையில், ஈஸிஜெட் (EasyJet) விமான நிறுவனம் தனது சேவையை மீண்டும் தொடங்கியுள்ளது.
ஆனால், குறைந்த எண்ணிக்கையிலான உள்நாட்டு விமானங்களே இன்று (திங்கட்கிழமை) இயங்கத் தொடங்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது பெரும்பாலும் பிரித்தானியாவுக்குள் எடின்பர்க் (Edinburgh) மற்றும் பெல்ஃபாஸ்ட் (Edinburgh) போன்ற நகரங்களுக்கும், பிரான்ஸ், சுவிஸ்லாந்து, இத்தாலி மற்றும் போர்த்துக்கல் ஆகிய சில ஐரோப்பிய நகரங்களுக்கும் விமான சேவையை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், விமானப் பயணத்தின் போது எந்தவொரு உணவும் விமானத்தில் வழங்கப்படாது. அதேநேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு கை சுத்திகரிப்பு மற்றும் கிருமிநாசினி துடைப்பான்கள் வழங்கப்படும்.
தற்போதைய விதிகளின் கீழ், பிரித்தானியாவிற்குள் வருபவர்கள் அனைவரும் இரண்டு வாரங்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும். ஆனால் இது சுற்றுலா துறையில் ‘பேரழிவு தரும்’ விளைவை ஏற்படுத்தும் என்று விமான நிறுவனங்கள் கூறுகின்றன.
14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட கொள்கையை இரத்து செய்ய ஈஸிஜெட் மற்றும் இரண்டு விமான நிறுவனங்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளன.

0/Post a Comment/Comments

Previous Post Next Post