நடிகையின் குடும்பத்தினரை ஒட்டுமொத்தமாக தாக்கிய கொரோனா - Yarl Voice நடிகையின் குடும்பத்தினரை ஒட்டுமொத்தமாக தாக்கிய கொரோனா - Yarl Voice

நடிகையின் குடும்பத்தினரை ஒட்டுமொத்தமாக தாக்கிய கொரோனா

ஹிந்தி நடிகை மோஹனா குமாரி சிங்குக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இவர் ரெமோ டிசோசா இயக்கத்தில் பிரபுதேவா நடித்த ‘ஏபிசிடி’ ஹிந்தி படத்தில் நடித்துள்ளார்.

பியார் துனே கியா கியா, பியர் பைல்ஸ், சில்சிலா பியார் கா, டுவிஸ்ட்வாலா லவ் உள்பட தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார். டொரோடானில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
கொரோனா ஊரடங்கினால் படப்பிடிப்புகள் இரத்து செய்யப்பட்டு இருப்பதை தொடர்ந்து நடிகை மோஹனா குமாரி சிங் வீட்டில் இருந்தார். இந்த நிலையில் பரிசோதனையில் மோஹனா குமாரி சிங்குக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து வைத்தியசாலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து மோஹனா குமாரி சிங் கூறியதாவது: “எனது மாமியாருக்கு காய்ச்சல் இருந்தது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா அறிகுறிகள் தெரிந்தன.
இதையடுத்து குடும்பத்தினர் அனைவரும் பரிசோதனை செய்து கொண்டோம். அப்போது எனக்கும் மற்றவர்களுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. வீட்டில் இருந்தபோது எங்களுக்கு கொரோனா அறிகுறிகள் குறைவாகவே தெரிந்தன.

கால நிலை மாற்றத்தால் உடல் நிலையில் லேசான மாற்றம் இருப்பதாக கருதினோம். இப்போது நான் உள்பட குடும்பத்தினர் 7 பேர் மருத்துவமனையில் கொரோன சிகிச்சை பெற்று வருகிறோம். எங்கள் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது” இவ்வாறு கூறினார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post