குஜராத்தில் லேசான நிலநடுக்கம் பதிவு! - Yarl Voice குஜராத்தில் லேசான நிலநடுக்கம் பதிவு! - Yarl Voice

குஜராத்தில் லேசான நிலநடுக்கம் பதிவு!

குஜராத்தின் ராஜ்கோட் நகரின் அருகே இன்று (திங்கட்கிழமை) மதியம் 4.4 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
ராஜ்கோட்டில் இருந்து வடமேற்கில் சுமார் 82 கிமீ தொலைவில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம்  4.4 ரிக்டர் அலகாக பதிவாகியிருந்தாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் கட்டிடங்கள் குலுங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், சேதம் குறித்த விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை.  கடந்த 24 மணி நேரத்தில் 2ஆவது நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முன்னதாக  நேற்று காலை கட்ச் பிராந்தியத்தில் 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குஜராத்தின் கட்ச் பகுதியில் 2001ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post