பொலிவுட் திரையுலகம் சுஷாந்த் சிங்கை முறையாக நடத்தவில்லை – கங்கனா குற்றச்சாட்டு! - Yarl Voice பொலிவுட் திரையுலகம் சுஷாந்த் சிங்கை முறையாக நடத்தவில்லை – கங்கனா குற்றச்சாட்டு! - Yarl Voice

பொலிவுட் திரையுலகம் சுஷாந்த் சிங்கை முறையாக நடத்தவில்லை – கங்கனா குற்றச்சாட்டு!

பொலிவுட் திரையுலகம் நடிகர் சுஷாந்த் சிங்கை முறையாக நடத்தவில்லை என நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.
சுஷாந்த் சிங்கின் மரணம் குறித்து பலர் கருத்து தெரிவித்துள்ள நிலையில், கங்கனா ரணாவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு காணொளியை பதிவிட்டுள்ளார்.
குறித்த காணொளியிலேயே அவர் மேற்படி கூறியுள்ளார். தொடர்ந்து தெரிவித்துள்ள அவர்,  “பொலிவுட்  திரையுலகம் சுஷாந்தை முறையாக நடத்தவில்லை. அவருக்கு போதிய திறமை,  நல்ல நடிப்பு,  பல வெற்றிகளை  கொடுத்த போதிலும்  திரையுலகம் அவருக்கு முறையான அங்கீகாரத்தை கொடுக்கவில்லை.
அவரது முதல் திரைப்படமான கை போ சேவில் அவரது நடிப்பு ஏன் பெரிய அளவில் பேசப்படவில்லை? அவர் இறுதியாக நடித்த சிச்சோரே போன்ற ஒரு அற்புதமான படம் புறக்கணிக்கப்பட்டு கல்லி பாய் போன்ற மோசமான படத்திற்கு அனைத்து விருதுகளும் வழங்கப்பட்டது ஏன்? திறமை இல்லை என தன்னைப்பற்றி மற்றவர்கள் சொன்னதை சுஷாந்த் நம்பியது மட்டுமே அவர் செய்த மிகப்பெரிய தவறு” எனக்  கூறியுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post