சபரிமலை விவகாரத்தில் சர்ச்சையில் சிக்கிய ரெஹானா பாத்திமா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குகள்! - Yarl Voice சபரிமலை விவகாரத்தில் சர்ச்சையில் சிக்கிய ரெஹானா பாத்திமா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குகள்! - Yarl Voice

சபரிமலை விவகாரத்தில் சர்ச்சையில் சிக்கிய ரெஹானா பாத்திமா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குகள்!

சபரிமலை ஐயப்பன் கோயில் விவகாரத்தில் சர்ச்சையில் சிக்கிய ரெஹானா பாத்திமா  என்ற பெண்ணிய ஆர்வலர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவரது குழந்தைகளைக் கொண்டு தனது அரை நிர்வாண உடலில் ஓவியம் வரைந்து அதனை காணொளியாக வெளியிட்டமை தொடர்பாகவே இவ்வாறு வழக்குப் பதிவாகியுள்ளது.
அனைத்து வயதுப் பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வழிபடச் செல்லாம் என கடந்த 2018ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
இதையடுத்து பெண்ணியவாதியான ரெஹானா பாத்திமா சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் இருமுடிகட்டி நுழைய முயன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார்.
இதன்பின்னர், ரெஹானா பாத்திமாவுக்கு, அவர் பணியாற்றிவந்த பி.எஸ்.என்.எல். என்ற நிறுவனம் கடந்த மாதம் கட்டாய ஓய்வு கொடுத்திருந்தது.
இந்நிலையில், இன்னொரு சர்ச்சையில் ரெஹானா பாத்திமா சிக்கியுள்ளதுடன், தன்னுடைய சிறுபராய பிள்ளைகளைக் கொண்டு தனது அரை நிர்வாண உடலில் ஓவியம் வரைவித்ததுடன் அதனை ‘உடலும் மற்றும் அரசியலும்’ என்ற தலைப்பில் காணொளியாக வெளியிட்டுள்ளார்.
அத்துடன், குறித்த காணொளி, புகைப்படங்களை முகநூலில் பதிவேற்றி சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் ஆண் மற்றும் பெண் உடல்குறித்த கருத்துக்களை ரெஹானா பாத்திமா பதிவிட்டு இருந்தார்.
இதையடுத்து, இது குழந்தைகள் மீதான பாலியல் சீண்டல் என பல்வேறு அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைச்சட்டமான போக்சோ சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post