பாடசாலை கற்றல் நேரம் வகுப்புரீதியாக மாற்றம்! - Yarl Voice பாடசாலை கற்றல் நேரம் வகுப்புரீதியாக மாற்றம்! - Yarl Voice

பாடசாலை கற்றல் நேரம் வகுப்புரீதியாக மாற்றம்!பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்ட பின்னர் பாடசாலைகளின் கற்றல் நேரத்தில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பாடசாலையில் மாணவர்கள் ஒன்றாக இருப்பதை தவிர்ப்பதற்காக, வகுப்புக்கள் வெவ்வேறு நேரங்களில் நடைபெறவுள்ளது.
அதன்படி, 3 மற்றும் 4 ஆம் தர வகுப்புகள் காலை 7.30 மணி முதல் 11.30 மணி வரை நடைபெறும்
5 ஆம் தர மாணவர்களுக்கு காலை 7.30 மணி முதல் மதியம் 12 மணி வரை கற்றல் செயற்பாடுகள் நடைபெறும். 6 முதல் 9 ஆம் தர மாணவர்களிற்கான கற்றல் செயற்பாடுகள் காலை 7.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெறும்.
10 முதல் 13 ஆம் தரம் வரையிலான வகுப்புக்கள் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் டலஸ் அழகபெரும தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post