கொரோனா எனும் அடி சாதாரண அடி அல்ல – ரஜினிகாந்த் - Yarl Voice கொரோனா எனும் அடி சாதாரண அடி அல்ல – ரஜினிகாந்த் - Yarl Voice

கொரோனா எனும் அடி சாதாரண அடி அல்ல – ரஜினிகாந்த்

கொரோனா எனும் அடி சாதாரண அடி அல்ல. வல்லரசு நாடுகளையே கதிகலங்க வைத்திருக்கும் பிசாசுத்தனமான அசுர அடி என நடிகர் ரஜினி காந்த் தெரிவித்துள்ளார்.
கொரோனா பிரச்சினை குறித்து நடிகர் ரஜனிகாந்த் தனது இரசிகர்களுக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே மேற்படி குறிப்பிட்டுள்ளார்.
குறித்த கடிதத்தில் மேலும் தெரிவித்த அவர், “கொரோனா வைரஸ் தொற்றால் அவதிப்பட்டு கொண்டிருக்கும் ஏழை,  எளிய மக்களுக்கு இடைவிடாமல் தங்களது உதவிகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கும்  எனது உறுப்பினர்களுக்கும்  மனமார்ந்த பாராட்டுகளையும், மகிழ்ச்சியையும் தெரிவித்து கொள்கிறேன்.
அடிபட்ட உடனேயே வலி தெரியாது. இப்போது நமக்கு பட்டிருக்கும் கொரோனா எனும் அடி சாதாரண அடி அல்ல. வல்லரசு நாடுகளையே கதிகலங்க வைத்திருக்கும் பிசாசுத்தனமான அசுர அடி.
இப்போதைக்கு இது தீராது போல் தெரிகிறது. இதனுடையே வலி வருங்காலங்களில் பல விதங்களில் நமக்கு பல கடுமையான வேதனைகளை தரும். உங்களது குடும்பத்தாரின் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்து அவர்களை பாதுகாப்பதுதான் உங்களது அடிப்படை கடமை எந்த சூழலிலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் மாஸ்க் அணியாமலும் இருக்காதீர்கள். ஆரோக்கியம் போச்சுன்னா! வாழ்க்கையே போச்சு!. ” எனத் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post