யாழ் மாவட்ட அழகக சமாசத்திற்கும் தமிழரசு கட்சிக்குமிடையே சந்திப்பு... - Yarl Voice யாழ் மாவட்ட அழகக சமாசத்திற்கும் தமிழரசு கட்சிக்குமிடையே சந்திப்பு... - Yarl Voice

யாழ் மாவட்ட அழகக சமாசத்திற்கும் தமிழரசு கட்சிக்குமிடையே சந்திப்பு...

யாழ்மாவட்ட அழகக சங்கங்களின் சமாசத்தினருக்கும் தமிழரசு கட்சிக்கும் இடையேயான சந்திப்பு நேற்றுக்காலை யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழரசுக்கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இச்சந்திப்பில் யாழ்மாவட்ட வேட்பாளர்களான மாவை சேனாதிராசா, த.சித்தார்த்தன், பா.கஜதீபன், இ.ஆனல்ட் ஆகியோரும் வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது தற்போதைய அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பாக வேட்பாளர்களால் அழகக சங்க சமாச நிர்வாகத்தினருக்கு தெளிவுபடுத்தப்பட்டதுடன் சமாசத்தினரின்  கோரிக்கைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.


0/Post a Comment/Comments

Previous Post Next Post