பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மூன்று வீரர்களுக்கு கொரோனா... - Yarl Voice பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மூன்று வீரர்களுக்கு கொரோனா... - Yarl Voice

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மூன்று வீரர்களுக்கு கொரோனா...கொரோனா வைரசின் கோரதாண்டவம் உலகையே உலுக்கி வருகிறது. எல்லா தரப்பு மக்களையும் அச்சுறுத்தி வரும் இந்த கொடிய ஆட்கொல்லியின் தாக்கம் விளையாட்டு வீரர்களையும் விட்டு வைக்கவில்லை.

இதற்கிடையில், கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணியுடன் விளையாட உள்ளது. 


 
இந்நிலையில், இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்காக அந்நாட்டு செல்வதற்கு முன்னர் பாகிஸ்தான் வீரர்கள் கொரோனா பரிசோதனை செய்துகொண்டர். 

ராவல்பிண்டியில் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில், பாகிஸ்தான் அணியின் வீரர்கள் மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அந்த அணியின் ஹைதர் அலி , ஹரிஸ் ரஃப், ஷதிப் கான்  ஆகிய மூன்று வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

வைரஸ் உறுதி செய்யப்பட்ட வீரர்கள் மூன்று பேருக்கும் வைரஸ் தொடர்பான எந்த அறிகுறிகளும் இல்லை எனவும், அறிகுறிகள் இல்லாமலேயே வீரர்களுக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, கொரோனா உறுதி செய்யப்பட்ட வீரர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷாகீத் அப்ரிடிக்கு கொரோனா வைரஸ் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

0/Post a Comment/Comments

Previous Post Next Post