தற்போதைய ஆட்சியில் தமிழர்களுக்கு எதுவும் கிடைக்குமென நம்பவில்லை: மாமனிதர் ரவிராஜின் மனைவி - Yarl Voice தற்போதைய ஆட்சியில் தமிழர்களுக்கு எதுவும் கிடைக்குமென நம்பவில்லை: மாமனிதர் ரவிராஜின் மனைவி - Yarl Voice

தற்போதைய ஆட்சியில் தமிழர்களுக்கு எதுவும் கிடைக்குமென நம்பவில்லை: மாமனிதர் ரவிராஜின் மனைவி

தற்போதைய ஆட்சியின் கீழ் தமிழ் மக்களுக்கு எதுவுமே கிடைக்குமென தான் நம்பவில்லை என்றும் நல்லாட்சியென கூறப்பட்ட முன்னைய ஆட்சியிலேயே தனது கணவரது படுகொலை வழக்கு மூடி வைக்கப்பட்டதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரும் மாமனிதர் ரவிராஜின் மனைவியுமான சசிகலா ரவிராஜ் தெரிவித்தார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “வடக்கிலுள்ள 87ஆயிரம் விதவைகள் சார்பில் நான் அரசியலுக்கு வந்துள்ளேன். கடந்த பத்து வருடங்களிலும் மாறி மாறி கதிரையிலிருந்த எந்தவொரு அரசும் அவர்கள் தொடர்பாக எதனையும் செய்யவில்லை.
நான் மக்கள் பிரதிநிதியாக தெரிவானதும் அரசினது உதவிகளை மட்டும் நம்பியிருக்காது புலம்பெயர் உறவுகள் மற்றும் சர்வதேச உதவிகள் மூலம் அவர்களது வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவேன்.
குடும்ப தலைவரை இழந்த குடும்பமொன்றின் வலி என்னவென்பதை நானும் எனது இரு பிள்ளைகளும் நன்கு அறிவோம்.
குறிப்பாக இளம் சமுதாயத்தை மீட்டெடுக்க யுத்த அவலங்களுடன் வாழும் விவசாயிகள் மற்றும் மீனவர்களது வாழ்வியலை கட்டியெழுப்ப என்னால் முடியும் அதற்காக பாடுபடுவேன்.
எனது முதன்மை பணியாக விதவைகள் தொடர்பான தரவு தளத்தை உருவாக்கவுள்ளேன். அதற்கு அனைவரது ஒத்துழைப்பினையும் பெற்று அதனை நிறைவேற்ற முடியும் என நம்புகிறேன்.
எனது கணவரது பாதையில் பயணிப்பேன். கணவரை நேசிக்கும் யாழ்ப்பாண மக்கள் அதிலும் குறிப்பாக பெண்கள் கூட்டமைப்பிற்கு அளிக்கின்ற வாக்கில் ஒன்றை எனக்களிப்பார்கள் என உறுதியாக நம்புகிறேன்.
அதேவேளை, எனது கணவருக்கு மரணத்தின் பின்னராக வழங்கப்பட்ட மாமனிதர் கௌரவத்தை சாவகச்சேரியில் நிறுவப்பட்ட தூபியில் நீக்கியதில் எனக்கு உடன்பாடில்லை. இது தொடர்பாக மேலதிகமாக நான் தற்போது பேசவிரும்பவில்லை” என மேலும் தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post