ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெறுமா? இறுதி முடிவு விரைவில்! - Yarl Voice ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெறுமா? இறுதி முடிவு விரைவில்! - Yarl Voice

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெறுமா? இறுதி முடிவு விரைவில்!

15ஆவது ஆசிய கிண்ண ரி-20 கிரிக்கெட் தொடர் நடத்தப்படுமா என்பதற்கான, இறுதி முடிவு குறித்து தகுந்த நேரத்தில் அறிவிக்கப்படும் என ஆசிய கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
ஆசிய கிண்ண தொடரை நடத்துவது குறித்த கூட்டம் இணையம் வழியாக நடைபெற்றது. எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் ரி-20 ஆசியக் கிண்ண தொடரை நடத்தும் வாய்ப்பு பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இத்தொடரை, நடப்பு ஆண்டு நடத்த முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதனிடையே இந்தக் கூட்டம் குறித்து ஆசிய கிரிக்கெட் சபை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இதில் ‘இந்த வருடம் ஆசியக் கிண்ண தொடரை நடத்துவது குறித்து கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக எந்த நாட்டில் தொடரை நடத்தவேண்டும் என்றும் விவாதிக்கப்பட்டது. இறுதி முடிவு குறித்து தகுந்த நேரத்தில் அறிவிக்கப்படும்’ எனக் கூறப்பட்டுள்ளது.
ஆசிய கிண்ண ரி-20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்க, பாகிஸ்தானுக்கு செல்ல இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளதால், பொது இடமான ஐக்கிய அரபு அமீரகத்தில் இத்தொடர் நடைபெறும் சூழல் உருவாகியுள்ளது.
2018ஆம் ஆண்டு ஆசிய கிண்ண தொடர் இந்தியாவில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால், ஐக்கிய அரபு அமீரகத்தில் இத்தொடர் நடைபெற்றது.
ஆசிய கிண்ண கிரிக்கெட் முழுத் தொடரையும் பாகிஸ்தானில் நடத்த முடியவில்லை என்றால் பாகிஸ்தான் போட்டித் தொடரை நடத்துவதைக் கைவிடவே செய்யும் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை முன்னதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post