தூய தமிழில் பேசுவோருக்கு பரிசு: தமிழக அரசின் புதிய திட்டம்! - Yarl Voice தூய தமிழில் பேசுவோருக்கு பரிசு: தமிழக அரசின் புதிய திட்டம்! - Yarl Voice

தூய தமிழில் பேசுவோருக்கு பரிசு: தமிழக அரசின் புதிய திட்டம்!

அன்றாட வாழ்க்கையில் தூய தமிழில் பேசுவோருக்கு பரிசுத் தொகை வழங்கும் திட்டமொன்றை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
அந்தவகையில், இதரமொழிச் சொற்களின் பயன்பாடு அல்லாமல் தூய தமிழில் பேசும் மூவருக்கு 5 ஆயிரம் ரூபாய் (இந்திய மதிப்பில்) பெறுமதியான பரிசுத் தொகை வழங்கப்படுமென செந்தமிழ் சொற்பிறப்பியல் அகர முதலி திட்டத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, தகுதியுடையோர் sorkuvai.com என்ற இணையத்தளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த விண்ணப்பத்துடன், நாடறிந்த தமிழ்ப் பற்றாளர்கள் இருவரிடம் தமது தமிழ்ப் பற்றை உறுதிசெய்து சான்றிதழ் பெற வேண்டும் என்பதுடன் சுய விபரக் குறிப்புக்களுடன் விண்ணப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த விண்ணப்பங்கள், ஓகஸ்ட் 15 ஆம் திகதிக்குள் அனுப்பிவைக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


[ads id="ads1"]

0/Post a Comment/Comments

Previous Post Next Post