யாழ் மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் தொற்று நீக்கல் மேற்கொள்ள முடிவு... - Yarl Voice யாழ் மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் தொற்று நீக்கல் மேற்கொள்ள முடிவு... - Yarl Voice

யாழ் மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் தொற்று நீக்கல் மேற்கொள்ள முடிவு...

யாழ் மாநகரசபை நிர்வாகப் பரப்பினுள் அமையப்பெற்றுள்ள பாடசாலைகளில் தொற்று நீக்கல் நடவடிக்கைகளை மேற்கொள்ள யாழ் மாநகரசபை தயாராக உள்ளதாக பிரதி முதல்வர் து. ஈசன் அறிவித்துள்ளார்.

அவர் இது தொடர்பில் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் இருந்து தெரியவருவதாவது,

பாடசாலைகள் ஜூன் 29 முதல் கட்டம் கட்டமாக ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதால் அதற்கு முன்னராக தொற்று நீக்கல் நடவடிக்கைகளை மேற்கொள்ளல் அவசியம் ஆகும். 

எனவே தமது பாடசாலைகளுக்கு தொற்று நீக்கல் மேற்கொள்ள வேண்டுமாயின் விண்ணப்பிக்கின்ற ஒவ்வொரு பாடசாலைகளும் 25.06.2020 ஆம் திகதி முன்னர் தமது பாடசாலைகளை சிரமதானம் செய்து வைத்திருக்க வேண்டியது மிக முக்கியமான விடயமாகும்.

சிரமதானம் செய்யப்படாத பாடசாலைகளுக்கு கிருமித் தொற்று நீக்கல் மேற்கொள்வது சிரமமாகும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

எனவே உரிய முடிவுத் திகதிக்கு முன்னர் கிருமித் தொற்று நீக்கலுக்காக விண்ணப்பிக்கின்ற பாடசாலைகளின் விண்ணப்பங்கள் விண்ணப்பிக்கப்படுகின்ற கால ஒழுங்கில் பதிவு செய்யப்பட்டு தொற்று நீக்கல் மேற்கொள்ளப்படும் என்பது விசேட அம்சமாகும்.
மேலதிக விபரங்களுக்கு யாழ் மாநகர முதல்வர் அலுவலகம் மற்றும் மாநகர பதில் முதல்வரை தொடர்பு கொள்ள முடியும் எனவும் அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post