பருத்தித்துறையில் போதைப் பொருளுடன் ஒருவர் கைது!! -2 கிலோ ஜஸ், 25 கிலோ கஞ்சா மீட்பு- - Yarl Voice பருத்தித்துறையில் போதைப் பொருளுடன் ஒருவர் கைது!! -2 கிலோ ஜஸ், 25 கிலோ கஞ்சா மீட்பு- - Yarl Voice

பருத்தித்துறையில் போதைப் பொருளுடன் ஒருவர் கைது!! -2 கிலோ ஜஸ், 25 கிலோ கஞ்சா மீட்பு-

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் ஐஸ் போதைப்பொருள் உடைமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் இராணுவத்துடன் விசேட அதிரடிப் படையினர் இனைந்து கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பருத்தித்துறை பகுதியில் சட்டவிரோதமான முறையில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக புலனாய்வு பிரிவினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து இராணுவம் மற்றும் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட விசாரணையில் இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 2 கிலோ ஐஸ் போதைப்பொருள் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.மேலும் வாகனம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

 கைது செய்யப்பட்ட சந்தேகநபரையும் மீட்கப்பட்ட போதைப் பொருட்களையும்,வாகனத்தையும் பருத்தித்துறை பொலிஸாரிடம் விசேட அதிரடிப் படையினர் ஒப்படைத்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.மீட்கப்பட்ட போதைப் பொருட்களின் பெறுமதி 2 கோடிக்கும் அதிகம் ஆனது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post