இருவருக்கு கொரோனா தொற்று உறுதி - Yarl Voice இருவருக்கு கொரோனா தொற்று உறுதி - Yarl Voice

இருவருக்கு கொரோனா தொற்று உறுதி

இன்றைய பரிசோதனையில்  வவுனியா தனிமைப்படுத்தல் நிலையங்களைச் சேர்ந்த இருவருக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டது என யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்தார். 

இன்று 69 பேருக்கான பரிசோதனைகள் யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்டன.

பம்பைமடு தனிமைப்படுத்தல் (BTS) மையத்தை சேர்ந்த   10 பேர், பம்பைமடு தனிமைப்படுத்தல் மையத்தை சேர்ந்த 2 பேர், 
மன்னார் பொது வைத்தியசாலையை சேர்ந்த 7 பேர், வவுனியா விமானப்படை தனிமைப்படுத்தல் மையத்தை சேர்ந்த 20 பேர், காங்கேசன்துறை கடற்படை வைத்தியசாலையை சேர்ந்த 10 பேர், யாழ் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவை சேர்ந்த (வேலனை) 20 பேரென  மொத்தம் 69 பேருக்கான பரிசோதனைகள் யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்டன. 

0/Post a Comment/Comments

Previous Post Next Post