வடக்கில் இதுவரை 204 தேர்தல் விதிமுறை மீறில்கள் பதிவு - யாழிலேயே அதிக முறைப்பாடு - Yarl Voice வடக்கில் இதுவரை 204 தேர்தல் விதிமுறை மீறில்கள் பதிவு - யாழிலேயே அதிக முறைப்பாடு - Yarl Voice

வடக்கில் இதுவரை 204 தேர்தல் விதிமுறை மீறில்கள் பதிவு - யாழிலேயே அதிக முறைப்பாடு

2020ஆம் ஆண்டின் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் இதுவரை வடக்கு மாகாணத்தில் 204 விதிமுறை மீறல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வடக்கு மாகாணத்தில் செய்யப்பட்டுள்ள முறைப்பாடுகளில் அதிகப்படியானவை யாழ்ப்பாணம் நிர்வாக மாவட்டத்திலேயே கானப்படுகின்றது. 

இங்கே 96 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டதோடு வவுனியா மாவட்டத்தில் 33 முறைப்பாடுகளும் இமன்னார் மாவட்டத்தில் 28 முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதேபோன்று கிளிநொச்சி மாவட்டத்தில் 24 முறைப்பாடுகளும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 23 முறைப்பாடுகளுமாக யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில்120 முறைப்பாடுகளும் வன்னித் தேர்தல் மாவட்டத்தில் 84 முறைப்பாடுகளாகவே 204 முறைப்பாடுகள் கானப்படுகின்றது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post