குருபரன் இராஜினாமா செய்ததையடுத்து சுரேன் இராகவனும் இராஜினாமா - Yarl Voice குருபரன் இராஜினாமா செய்ததையடுத்து சுரேன் இராகவனும் இராஜினாமா - Yarl Voice

குருபரன் இராஜினாமா செய்ததையடுத்து சுரேன் இராகவனும் இராஜினாமா

யாழ் பல்கலைக்கழன சட்டத்துறைத் தலைவர் கலாநிதி குருபரன் இராஐpனாமா செய்ததையடுத்து யாழ் பல்கலைக்கழக பேரவை உறுப்பினர் பதவியிலிருந்து வடக்கு முன்னாள் ஆளுநர் சுரேன் இராகவனும் இராஜினாம செய்வதற்கு தீர்மானித்துள்ளார்.

"யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்டபீடத்தின் விரிவுரையாளர் சட்டத்தரணி, கலாநிதி குமாரவடிவேல் குருபரன் நீதிமன்றில் முன்னிலையாவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அழுத்தத்தின் பேரில் கடந்த வருடத்தின் பிற்பகுதியில் பல்கலைக்கழக பேரவை தடை விதித்தமை காரணமாக, அவர் தன்னுடைய விரிவுரையாளர் பதவியிலிருந்து இராஜினாமா செய்யவேண்டிய துரதிஷ்டவசமான நிலை ஏற்பட்டுள்ளது.

கல்விமானாக நான் அவருக்கு ஆதரவை தெரிவிப்பதோடு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பேரவைக்குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் நான் இராஜினாமா செய்யத் தீர்மானித்துள்ளேன்.

உயர்கல்வி அமைச்சரை சந்தித்து எனது இராஜினாமா கடிதத்தை கையளிப்பதுடன் கலாநிதி குருபரனுக்கு ஏற்பட்டுள்ள நிலை தொடர்பிலும் கலந்துரையாடுவதற்கு தீர்மானித்துள்ளேன்.

கல்விமானொருவருக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலைக்கு FUTA போன்ற இயக்கம் மௌனமாக இருப்பதும் ஆரோக்கியமான விடயமல்ல என்பதையும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

கல்விமான்களின் சுயாதீனம் பாதுகாக்கப்பட வேண்டும்!"

கலாநிதி சுரேன் ராகவன்
2020.07.18

A gross injustice has occurred in the academic field today. Jaffna Law faculty dean my friend - a true intellect - a professor of law- Dr Guruparan Kumaravadivel has (been forced) render his resignation at the university so that he can continue to practice as a mere attorney-at -law.

The UGC forced him to select between the two ( because he often without a fee) appeared for some of the most sensitive cases in the  country .

The deep silence of bodies like FUTA is disturbing

Dr.Suren Raghavan
2020.07.18

0/Post a Comment/Comments

Previous Post Next Post