பாகிஸ்தானில் சீக்கிய யாத்ரீகர்களை ஏற்றிச்சென்ற பேருந்து மீது ரயில் மோதியதில் 22 பேர் உயிரிழப்பு! - Yarl Voice பாகிஸ்தானில் சீக்கிய யாத்ரீகர்களை ஏற்றிச்சென்ற பேருந்து மீது ரயில் மோதியதில் 22 பேர் உயிரிழப்பு! - Yarl Voice

பாகிஸ்தானில் சீக்கிய யாத்ரீகர்களை ஏற்றிச்சென்ற பேருந்து மீது ரயில் மோதியதில் 22 பேர் உயிரிழப்பு!


கிழக்கு பாகிஸ்தானில் சீக்கிய யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது, பயணிகள் ரயில் மோதியதில் குறைந்தது 22 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் பாகிஸ்தான் அரசாங்க அதிகாரி இம்ரான் கோண்டலின் தெரிவித்துள்ளார்.

குறித்த பேருந்து, ஆளில்லா ரயில் கடவையை கடக்க முயன்ற போது பஞ்சாப் மாகாணத்தின் ஷேகுபுரா மாவட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

உயிரிழந்தவர்களும் காயமடைந்தவர்களும் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக மாவட்ட பொலிஸ்துறைத் தலைவர் காசி சலாவுதீன் தெரிவித்துள்ளார்.

சீக்கிய யாத்ரீகர்கள் வடமேற்கு நகரமான பெஷாவரைச் சேர்ந்தவர்கள் என்றும், ஷேகுபுராவைச் சேர்ந்த நங்கனா சாஹிப்பின் ஆலயத்திலிருந்து திரும்பி வந்தபோதே இந்த விபத்து சம்பவித்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது இரங்கலைத் தெரிவித்தார்.

‘அனைத்து குடும்பங்களுக்கும் வசதி மற்றும் பராமரிப்பை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டேன். எங்கள் முழு ரயில்வேயின் செயற்;பாட்டு பாதுகாப்பு சீர்தர இயக்கச் செய்முறைகளும் உடனடியாக மதிப்பாய்வு செய்யப்படும்’ என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

சீக்கியர்கள் பாகிஸ்தானில் தங்கள் மதத் தலைவர்களின் பல ஆலயங்களைக் கொண்டுள்ளனர். சீக்கிய நிறுவனர் குருநானக்கின் ஒன்று, பாகிஸ்தானின் கர்தார்பூரில், இந்தியாவின் எல்லையில், பஞ்சாபில் அமைந்துள்ளது. அவர் 16ஆம் நூற்றாண்டில் இறந்த பிறகு இது கட்டப்பட்டது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post