ஜமால் கஷோகி கொலை வழக்கு: சவுதி சந்தேக நபர்கள் மீதான விசாரணையை தொடங்கியது துருக்கி! - Yarl Voice ஜமால் கஷோகி கொலை வழக்கு: சவுதி சந்தேக நபர்கள் மீதான விசாரணையை தொடங்கியது துருக்கி! - Yarl Voice

ஜமால் கஷோகி கொலை வழக்கு: சவுதி சந்தேக நபர்கள் மீதான விசாரணையை தொடங்கியது துருக்கி!

சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை தொடர்பாக, குற்றம் சாட்டப்பட்ட 20 சவுதி பிரஜைகள் மீதான விசாரணையை துருக்கி நீதிமன்றம் ஆரம்பித்துள்ளது.

காக்லேயன் மாவட்டத்தில் உள்ள இஸ்தான்புல் மாகாணத்தின் பிரதான நீதிமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு விசாரணை தொடங்கியது.

59 வயதான வொஷிங்டன் போஸ்ட் கட்டுரையாளரான கஷோகி, இஸ்தான்புல்லில் உள்ள சவுதி துணைத் தூதரகத்தில் 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி கொல்லப்பட்டார். அவர் தனது திருமண ஆவணங்களைப் பெறுவதற்காக வளாகத்திற்குள் நுழைந்திருந்தபோதே அவர் படுகொலை செய்யப்பட்டார்.

கஷோகியின் உடல் கொலையாளிகளால் தூதரகத்தில் துண்டிக்கப்பட்டது எனவும், அவரது எச்சங்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று துருக்கி அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதனிடையே மார்ச் மாதத்தில், கஷோகி கொலை தொடர்பாக துருக்கி வழக்குரைஞர்கள், சவுதி மகுடத்திற்குரிய இளவரசர் முகமது பின் சல்மான், ராஜ்யத்தின் உண்மையான ஆட்சியாளரான இரண்டு முன்னாள் மூத்த உதவியாளர்கள் உட்பட 20 சவுதி நாட்டினரை குற்றஞ்சாட்டினர்.

இந்த குற்றச்சாட்டின் படி, சவூதி அரேபியாவின் முன்னாள் துணை புலனாய்வுத் தலைவர் அகமது அல்-அஸ்ரி ஒரு குழுவை நிறுவி, சவுதி அரசாங்கத்தை விமர்சித்த பத்திரிகையாளரின் கொலைக்கு திட்டமிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

முன்னாள் அரச நீதிமன்றமும் ஊடக ஆலோசகருமான சவுத் அல்-கஹ்தானி, இந்த குழுவுக்கு உத்தரவுகளை வழங்குவதன் மூலம் இந்த நடவடிக்கையைத் தூண்டி வழிநடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மற்ற சந்தேக நபர்கள் முக்கியமாக சவுதி அதிகாரிகள் இந்த படுகொலை நடவடிக்கையில் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது. துருக்கிய வழக்குரைஞர்கள் ஏற்கனவே சந்தேக நபர்களுக்கு கைது உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகனால் தனிப்பட்ட முறையில் அறியப்பட்ட பத்திரிகையாளர் கொல்லப்பட்ட பின்னர், ரியாத்துடன் அங்காராவின் உறவுகள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகின.

சவுதி அரசாங்கத்தின் மிக உயர்ந்த மட்டத்தில் கொலை செய்ய உத்தரவிடப்பட்டதாக எர்டோகனும் குற்றஞ்சாட்டினார்.

சவுதி இளவரசர் மொஹமத் பின் சல்மானை விமர்சிப்பவர்களில் செய்தியாளர் ஜமால் முக்கியமானவர். அல்-வடான் நாளிதழின் முன்னாள் ஆசிரியராக இருந்த இவர், சில சவுதி தொலைக்காட்சிகளிலும் பணியாற்றியுள்ளார்.

சவுதி அரச குடும்பத்துடன் பல ஆண்டுகள் ஜமால் நெருக்கமாக இருந்தார். சவுதியின் மூத்த அதிகாரிகளுக்கு ஆலோசகராகவும் இவர் இருந்துள்ளார்.

ஜமாலின் நண்பர்கள் பலர் கைது செய்யப்பட்டதற்கு பிறகு, அல்-ஹயாத் நாளிதழுக்கு சிறப்பு கட்டுரை எழுதுவது நிறுத்தப்பட்டது. பின்னர், அமெரிக்காவுக்கு சென்ற ஜமால், வொஷிங்டன் போஸ்டில் எழுதி வந்தார். மேலும் பல அரபு மற்றும் மேற்கத்திய தொலைக்காட்சிகளில் பேசியும் வந்தார்.

இந்தநிலையிலேயே சவுதி அரச குடும்பத்தின் இரகசிய தகவல்களை தெரிந்து வைத்திருந்தமையால், அது ஆபத்து என கருதிய சவுதி இளவரசர் மொஹமத் பின் சல்மான், இந்த கொலையை செய்ய திட்டமிருக்கலாம் என துருக்கி சந்தேகிக்கின்றது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post