கொரோனா தடுப்பு பணி: 44 கோடியே 34 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு – வர்த்தமானி வெளியீடு - Yarl Voice கொரோனா தடுப்பு பணி: 44 கோடியே 34 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு – வர்த்தமானி வெளியீடு - Yarl Voice

கொரோனா தடுப்பு பணி: 44 கோடியே 34 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு – வர்த்தமானி வெளியீடு

கொரோனா நோயாளிகள் உட்பட மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு உணவு வழங்க 44 கோடியே 34 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு வர்த்தமானி வெளியிட்டுள்ளது.

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் மருத்துவ பணியாளர்கள் மற்றும் நோயாளிகளுக்கு உணவு மற்றும் தேவையான வசதிகள் ஏற்படுத்தி தர மாதந்தோறும் நிதி ஒதுக்கப்படுகிறது.

அந்த வகையில் தற்போது 44 கோடியே 34 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு வர்த்தமானி வெளியிட்டுள்ளது.

சென்னையில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளின் உணவுக்காக 1 கோடியே 86 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் மருத்துவ பணியாளர்களுக்கு 40 கோடியே 8 இலட்சம் ரூபாய் நிதியும் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறையினருக்கு 2 கோடியே 38 இலட்ச ரூபாய் என மொத்தம் 44 கோடியே 34 இலட்சத்து 12 ஆயிரத்து 98 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post