முன்னாள் கல்வி ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்தில் ஆஜர் நவம்பர் 27 வரை வழக்கு ஒத்திவைப்பு.. - Yarl Voice முன்னாள் கல்வி ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்தில் ஆஜர் நவம்பர் 27 வரை வழக்கு ஒத்திவைப்பு.. - Yarl Voice

முன்னாள் கல்வி ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்தில் ஆஜர் நவம்பர் 27 வரை வழக்கு ஒத்திவைப்பு..

தமிழீழ விடுதலைப்புலிகள் மீள உருவாக வேண்டும் என்ற கருத்து தெரிவித்தது தொடர்பில்   முன்னாள் கல்வி ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மீது வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் புதுக்கடை  நீதிமன்றத்தில் முன்னை நாள் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலாா மகேஸ்வரன் நீதிமன்றத்தில் சட்டத்தரணி தவராஜா வுடன் ஆஜராகியிருந்தார்

வழக்கினைவிசாரணை செய்த நீதவான் எதிர்வரும் நவம்பர் 27 ம் திகதி வரை வழக்கினை ஒத்திவைத்தார்.

கடந்த2018 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் சிறுமி ஒருவர் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டசம்பவத்தினை தொடர்ந்து யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் முன்னாள் கல்வி ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் மீள உருவாக்கப்பட வேண்டுமென உரையாற்றியமை தொடர்பில் விஜயகலா மகேஸ்வரன் கைதுசெய்யப்படவேண்டுமென
தென்னிலங்கையில் பெரும் சர்ச்சை உருவாகிய நிலையில்   அப்போது பதவி வகித்தஅமைச்சுப் பதவியினையும் ராஜினாமா செய்திருந்தார்பின்னர் ஒருங்கிணைக்கப்பட்ட குற்றத்தடுப்பு  பிரிவினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது


0/Post a Comment/Comments

Previous Post Next Post