யாழிலுள்ள 7 ஆசனமும் கூட்டமைப்பிற்கு தான் - முன்னாள் எம்பி சரவணபவன் கணிப்பு - Yarl Voice யாழிலுள்ள 7 ஆசனமும் கூட்டமைப்பிற்கு தான் - முன்னாள் எம்பி சரவணபவன் கணிப்பு - Yarl Voice

யாழிலுள்ள 7 ஆசனமும் கூட்டமைப்பிற்கு தான் - முன்னாள் எம்பி சரவணபவன் கணிப்பு

யாழ்ப்பாணத்தில் 7 ஆசனங்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே பெற்றுக் கொள்ளும் என அக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் யாழில் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பின் போது எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

யாழில் பல கட்சிகள் போட்டியிட்டாலும் அவை எல்லாம் பிரிந்து நிற்கின்றன. ஆனால் கூட்டமைப்பு ஒற்றுமையாக இருக்கின்றது. உள்ளுக்குள் முரண்பாடுகள் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அடைய வேண்டிய இலக்கு பயணத்தில் ஒருமித்தே செயற்பட்டு வருகின்றொம்.

ஆகையினால் நாங்கள் ஒருமித்து நிற்குமிடத்தே ஒற்றுஐமயின் அவசியம் கருதி மக்கள் ஓரணியாக எங்களுக்கு தமது ஆதரவை வழங்குவார்கள். ஆகையினால்  7 ஆசனங்களையும் நாங்கள் கைப்பற்றுவோம். இது எனது கணிப்பு மட்டுமல் நம்பிக்கையாகவும் இருக்கின்றது என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post