மாற்று அணிகளுக்கு வாக்களிப்பது ஆபத்தானது - கூட்டமைப்பை மீண்டும் பலப்படுத்துங்கள் - சுமந்திரன் கோரிக்கை - Yarl Voice மாற்று அணிகளுக்கு வாக்களிப்பது ஆபத்தானது - கூட்டமைப்பை மீண்டும் பலப்படுத்துங்கள் - சுமந்திரன் கோரிக்கை - Yarl Voice

மாற்று அணிகளுக்கு வாக்களிப்பது ஆபத்தானது - கூட்டமைப்பை மீண்டும் பலப்படுத்துங்கள் - சுமந்திரன் கோரிக்கை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒன்றும் செய்யவில்லை மாற்று அணி வேண்டும் என்று சொல்லிக் கொண்டு வருபவர்கள் பச்சைப் பொய்களையே பரப்பி வருகின்றனர். அப்படியானவர்களுக்கு அளிக்கின்ற வாக்குகள் வீணாகப் போகின்ற வாக்குகள் என்பதுடன் சிதைவடைகின்ற வாக்குகளாகவே அமையுமென கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

வடமராட்சி கிழக்கில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் தெரிவித்ததாவது...

இலங்கையில் இன்றைக்கு மிகவும் வித்தியாமான ஆட்சி முறையொன்று உருவாக்கப்பட்டுக் கொண்டிருப்பதை நீங்கள் அனைவரும் பார்க்கலாம். வித்தியாசமானது என்று சொல்லுகின்ற போது சுதந்திரமடைந்த போது இருந்த எந்தவிதமான ஆட்சி முறையும் இல்லாத அதாவது ஒரு இரானுவ ஆட்சி இன்றைக்கு தலை தூக்கியிருக்கின்றது. இதற்கு முன்னர் எப்போதும் இப்படியாக இருந்ததில்லை. 

நாங்கள் இடையிலே 2015 ஆம் ஆண்டு ஒரு நல்லிணக்க அரசாங்கத்தை உருவாக்கினோம் என்று சொன்னொம். இரண்டு கட்சிகளுடைய தலைவர்களை வைத்து ஒரு புதிய ஆட்சியை உருவாக்கினோம். அதற்கு நாங்களும் உறுதுணையாக இருந்தோம். ஆனால் அது முன்னேற முடியாமல் அந்த ஆட்சி கவிழ்ந்து பழையபடி முன்னர் இருந்த ராஐபக்ச ஆட்சிக்கு நாடு சென்று விட்டது. 

ஆனால் பழையபடி ராஐபக்சாக்களிடம் நாடு சென்றுவிட்டது என்றதைக் கூட சரியானதொரு விளக்கமாக எடுக்க முடியாது. ஏனென்றால் அப்பொழுது இருந்த அரச தலைவர் மகிந்த ராஐபக்சவிற்கும் இப்பொழுது வந்திருக்கின்ற அரச தலைவர் கோத்தபாய ராஐபக்சவும் அண்ணண் தம்பியாக இருந்தாலும் அவர்களுக்கிடையில் பாரிய வித்தியாசம் இருக்கிறது. 

அண்ணண் 24 வயதில் பாராளுமன்றம் சென்றவர் .இப்ப ஐம்பது வருட பாராளுமன்ற வாழ்க்கையை நிறைவு செய்திருக்கினறார். பாராளுமன்ற ஐனநாயகத்திலே தான் அவர் பியிற்றப்பட்டவர். ஆவரை ஐனநாயகவாதி என்று எவரும் சொல்லவில்லை. இருந்தர்லும் அவருடைய பயிற்சி முழுவதும் பாராளுமன்றத்திலே தான் இருந்தது. 

ஆனால் தம்பியின் பயிற்சி முழுவதுமே ஒரு இரானுவப் பயிற்சியாகத் தான் இருந்தது. இரானுவப் பயிற்சி என்று சொன்னால் இரானுவத்திலே கேள்வி கேட்கின்ற உரிமை கிடையாது. மாற்றுக் கருத்தக்கு இடமிருக்காது. கலந்துரையாடலுக்கு உரித்து கிடையாது. கட்டளையிடுவதும் அவ்வாறு இடுகின்ற கட்டளையை நிறைவேற்ற வேண்டியதும் தான்.

அப்படியான ஒரு பின்புலத்தில் இருந்து வந்த ஒருவர் இன்றைக்கு நாட்டின் தலைவராக வந்திருக்கின்றார். அதனால் தான் இன்றைக்கு ஆட்சி முறையை நாங்கள் பார்க்கிற பொழுது அரச திணைக்களங்கள் அரசாங்கத்தினுடைய பொறிமுறைகளை சாதாரணமாக இருக்கின்ற நிறுவணங்களை உபயோகிக்காமல் அவர் சமாந்தரமாக வேறு வழியில் அரசாங்கத்தை நடாத்துவதற்கு முயற்சி செய்கின்றார்.

குறிப்பாக செயலணிகளை அமைக்கின்றார். இளைப்பாறிய இரானுவத் தளபதிகளை அதற்கு நியமிக்கின்றார். அரச திணைக்களங்களுக்கும் அமைச்சுக்களுக்கும் கூட செயலாளர்கள் எல்லாம் இளைப்பாறிய இரானுவ அதிகாரிகள் தான். ஆகையினாலலே அவருடைய நோக்கம் என்ன விதமாக இந்த நாட்டை ஆட்சி செய்யப் போகின்றார் என்பது தெளிவாகத் தெரிகின்றது.

இது ஐனநாயகத்திற்கு விடுக்கப்பட்டிருக்கின்ற பாரிய சவால். இந்தச் சூழ்நிலையில் நாட்டில் இருக்கின்ற இரண்டாவது பெரிய கட்சி இப்பொழுது அதுவும் இரண்டாக உடைந்து போய் இருக்கிறது. அகவே இப்படியான ஒரு புது ஆட்சிமுறையை எதிர்த்து நிற்பதற்கு சக்தியில்லாத ஒரு எதிர்க்கட்சி தான் இன்றைக்கு நாட்டிலே இருக்கின்றது. 

இந்தச் சூழ்நிலையில் தான் ஒரு பாராளுமன்றத் தேர்தல் வருகின்றது. துமிழ் மக்களுடைய பிரதிநிதித்துவம் இதுகால் வரைக்கும் ஒரே மாதிரியாகத் தான் இருந்திருக்கிறது. ஆதிலெ மாற்று செய்திகளுக்கு இடமிருந்திருக்காத வண்ணம் இருந்தருக்கிறது. குடந்த 1956 ஆம் ஆண்டிலிரந்து ஒவ்வொரு தேர்தல்களிலும் தமிழ் மக்கள் ஆகக் குறைந்தது ஒரு சமஸ்டித் தீர்விற்காக வடக்கு கிழக்கில் வாழு; தமிழ்மக்கள் வாக்களித்திருக்கின்றார்கள். 

இது ஒரு நிண்டகால ஐனநாயகத் தீர்ப்பு. எந்தவித சலனமும் இடையில் ஏற்படவில்லை. ஒருவர் இருவர் வேறு கட்சிகளில் இருந்து தெரிவு செய்யப்பட்டது நடந்திருக்கிறது. ஆனால் ஒட்டு மொத்தமாக யாருக்கு தமிழ் மக்கள் ஆணை கொடுத்தார்கள்என்று பார்த்தால் அன்று முதல் இன்று வரை அசையாமல் ஒரே விதமான ஆணையே கொடுக்கப்பட்டிருக்கின்றது. சுமஸ்டி என்பது தான் அந்த ஆணை. 

ஆதில் ஒரு தேர்தல் அதாவது 77ஆம் ஆண்டு தேர்தலில் தனிநாட்டுக்கான ஆணையைக் கூட கொடுத்தார்கள். ஆனால் அப்படியாக நாங்கள் ஒரே நிலைப்பாட்டில் இருந்திருந்த போதும் கூட வௌ;வேறு காலங ழ்நிலைகளில் யுத்த சூழ்நிலையில் அது குழப்பட்டிருக்கின்றது. முக்களுடைய பிரதிநிதிகள் இல்லாமல் பாராளுமன்றம் இருந்திருக்கிறது. ஆல்லது கேலிக் கூத்தான தேர்தல்கள் மூலமாக சில வேளைகளில் ஏராளமானவர்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள். 

ஆனால் இன்றைக்கு யுத்தம் முடிவடைந்த சூழலில் திரும்பவும் மக்கள் வாக்களித்து தங்கள் பிரதிநிதிகளைத் தெரீவு செய்யலாம் என்று இருக்கிற சூழ்நிலையில் நாங்கள் சரியான எங்களுடைய அந்த ஒரே நிலைப்பாட்டை திரும்பவும் திரும்பவும் தெரியப்படுத்துவது அத்தியாவசியமானது. இந்தச் சூழ்நிலையில் தான் இந்த மாற்றுக் கட்சிகள் என்று சொல்லி பலர் முன்வருகிறார்கள்.

கூட்டமைப்பு மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை. ஆனபடியினாலே மாற்று ஒன்று வேண்டும் என்று சொல்லி வருகிறவர்கள் எவர் கூட கூட்டமைப்பின் அதே பிரதிநிதித்துவத்தை அதாவது 15-20 பேர் கொண்ட பிரதிநிதித்துவத்தை அல்லது ஒரு அணியை பாராளுமன்றத்திற்கு அனுப்ப அவர்களால் முடியாது. ஆகக் குறைந்தது கூடியது ஒன்று இரண்டாகத் தான் அவர்களுடைய எதிர்பார்ப்பே அப்படியாகத் தான் இருக்கிறது. 

ஆனபடியினால் அந்தச் சூழலில் மாற்று அணியென்ற எதுவுமே இன்றைக்கு கிடையாது. கூட்டமைப்பு எதுவுமேசெய்யவில்லை என்பது முழுமையான பொய்யான பிரச்சாரம். அது உங்களுக்கும் தெரிந்திருக்க வேண்டும். விசேடமாக கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஒரு அரசியல் தீர்வைக் கொண்டு வருவதற்காக மிகவும் உற்சாகமாக வேலை செய்திருக்கிறோம். 

அதன் பிரதிபலனாக அனைத்துக் கட்சிகளும் இணங்கிய அரசியல் யாப்பின் வரைவு பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. அது மிகவும் முக்கியமான மைல்கல். அது நிறைவேறவில்லை. அதற்கு முன்னதாக அந்த அரசாங்கம் கவிழ்ந்துவிட்டது. ஆனால் இந்த இணக்கப்பாடு எய்தப்பட்டு ஒரு சமஸ்டி அடிப்படையிலான அரசமைப்பு ஒன்று பாராளுமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டது சாதாரண விடயமல்ல. அது எங்களுடைய அரசியல் தீர்வு சம்மந்தமான மிகப்பெரிய விடயம். 

அதே போல வௌ;வெறு நாளாந்தப் பிரச்சனைகளில் நாங்கள் ஈடுபட்டிருக்கிறோம். பல விடிவுகளை எடுத்துக் கொடுத்திருக்கிறோம். விசேடமாக எங்கள் மக்கள் நிலங்கள் விடுகிக்கப்பட்டிருக்கிறது. ஆயிரக்கணக்கில் விடுவிக்கப்பட்டள்ளது. அதே போல அரசியல் கைதிகளும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இன்றைக்கு பலர் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். அதுவும் பொய்யான குற்றச்சாட்டு. 

ஆனால் சிலர் விடுவிக்கப்படாமல் இருக்கின்றனர் என்பது உண்மை. ஆனால் 2015 ஆம் ஆண்டிலே ஒருசில மாதங்களுக்குள் மூன்றில் இரண்டு எணணிக்கையிலான அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். ஏனையவர்கள் விடுவிக்கப்படாததற்கு வேறு சில காரணங்களும் இருக்கின்றன. ஏங்கள் கைகளையும் மீறி சில சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. ஆனாலும் அதனை நாங்கள் கைவிடவில்லை. 

அண்மையிலே பிரதம மந்திரியொடு பேசிய போது இதைக் குறித்து நாங்கள் பேசியிருந்தோம். ஆதன் பின் நான் அவரைச் சந்தித்து 96 பேர்களுடைய பெயரை நான் கொடுத்திருக்கிறேன். ஆதைக் கொடுத்து ஒரு வார காலத்திற்குள்ளே அதில் 84 பேரை அரசாங்கம் விடுவிப்பதற்கான முன்மொழிவோடு சட்டமா அதிபரிடத்தே அனுப்பியிருப்பதாக பத்திரிகையிலே நான் பார்த்தேன். நீதியமைச்சர் சொல்லியுள்ளார். ஆகையினலலே அந்த விடயமும் முன்னேறுகிறது.

அபிவிருத்தி விடயத்திலே பல்வெறு அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படுகிறது. அது போதாததாக இருக்கலாம். ஆனால் முழு நாட்டோடும் நாங்கள் ஒப்பிட்டுப் பார்க்கிற பொழுது மற்றப் பிரதேசங்களில் நிகழாத அளவிற்கு வடக்கு கிழக்கிலே விசெடமாக வடக்கிலெ ஏராளமான நிதி செலவிடப்பட்டிருக்கிறது. புலவிதமான அபிவிருத்தி திட்டங்களினூடாக இது செய்யப்பட்டிருக்கிறது.

யாழ்ப்பாணத்திற்கு ஒரு சர்வதேச விமான நிலையம் கொண்டு வரப்பட்டது. மயிலிட்டி துறைமுகம் விடுவிக்கப்பட்டிருக்கிறது. பருத்தித்துறையிலே ஒரு மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படுகிறது. அப்படியாக பல விதமான முன்னேற்றங்கள் நிகழ்ந்த தான் இரக்கிறது. 

ஆதில் பல விசயங்கள் இன்னும் செய்யாமல் விடுபட்டிருக்கிறது. அது உண்மை தான். அதற்காக எதுவுமே நடக்கவில்லை என்று சொல்வது முற்று முழுதான பொய்யான கூற்று. இனிவரப் போகின்ற காலங்களில் நாங்கள் விசேடமாக ஒரு வேலைத் திட்டத்தை முன்னெடுக்கப் போகின்றொம். அது தான் எங்கள் மக்களுடைய பொருளாதார மீட்சி. 

ஏங்கள் மக்கள் அரசியல் தீர்வு வரும் வரைக்கும் காத்திருக்காமல் அவர்கள் வாழ வேண்டும். சுயமரியாதையோடு வாழ வேண்டும். தன்மாணத்தோடும் சுயமரியாதையோடம் வாழுவதாக இருந்தால் தங்கள் சொந்தக் காலில் நிற்க வேண்டும். தாங்கள் உழகை;குறிதிலே அவர்கள் வாழ வேண்டும். 

மற்றவர்களிடம் கையேந்தி நிற்கக் கூடாது. ஆப்படியாக ஒரு பொருளாதாரக் கட்டமைப்பை உருவாக்குவது சம்மந்தமாக பல முன்னெடுப்புக்களை நாங்கள் செய்திருக்கிறொம். தேர்தலுக்குப் பிறக நாங்கள் அதை அமுல்ப்படுத்த உத்தேசித்துள்ளளோம். 

ஆதிலெ மிக முக்கியமான விடயமாக இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புக்களை அதிகரித்தல். முதலிடம் பெறுகிறத. ஏனெனில் எமது இளைஞர்களுக்கு வேலையில்லாவிட்டால் அவர்கள் வெளிநாடுகளுக்கு தான் போவார்கள். வேறு வழியில்லை. ஆவ்வாறு இளைஞர்கள் எல்லாம் வெளிநாடு சென்று விட்டால் இங்கெ அதற்குப் பிறகு தீர்க்கப்பட வேண்டிய அரசியற் பிரச்சனைகள் எதுவும் இருக்காது. 

ஆனபடியினால் அரசியல் தீர்வை தொடர்ந்து கவனிக்கிற அதே வேளையில் சமாந்தரமாக எங்களுடைய மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும் ஒரு முக்கிய பங்களிப்பை நாங்கள் செய்வொம். அது இந்தத் தேர்தலினூடாக நாங்கள் அதற்குப் பின்னராக நாங்கள் செய்வொம். 

ஆனால் இவை எல்லாத்தையும் நாங்கள் செய்வதாக இருந்தால் நாங்கள் ஒரு அணியாக பலமான அணியாக பாராளுமன்றத்திலே இருக்க வேண்டும். அது அத்தியாவசியமானது. மற்ற அணிகளுக்கு வாக்குகள் போவதாக இருந்தால் அது எல்லாம் வீணாகப் போகின்ற வாக்:குகள் அது சிதைவடைகின்ற வாக்குகள். கூட்டமைப்பைப பத்து ஆசனங்களுக்குள்ளாக அடக்கிவிட்டு மற்ற ஒவ்வெரு கட்சியில் இருந்தும் ஒருவர் இருவர் பாராளுமன்றம் போனால் அதைவிட பலவினமான சூழ்நிலை இருக்க முடியாது.

 ஆனபடியினால் அப்படியான சிந்தனை உள்ளவர்களுக்கும் நீங்கள் இந்த விடயங்களைத் தெளிவுபடுத்தி நாங்கள் ஓரணியாக வடக்கும் கிழக்கிலும் உள்ள தமிழ் மக்கள் ஓரணியாக தொடர்ந்து நிற்க வேண்டும். அந்த ஓரணியான நிற்க வேண்டுமென்ற முக்கியத்துவத்தைச் சொல்லி வாக்களிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post