உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 87 லட்சத்து 30 ஆயிரத்தை கடந்தது - Yarl Voice உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 87 லட்சத்து 30 ஆயிரத்தை கடந்தது - Yarl Voice

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 87 லட்சத்து 30 ஆயிரத்தை கடந்தது


சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 213 நாடுகள்ஃ பிரதேசங்களுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.


இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். 

தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சிகள் ஒரு பக்கம் நடைபெற்று வந்தாலும் மருத்துவத்துறையினரின் தன்னலமற்ற சேவையால் வைரஸ் பாதிப்பில் இருந்து பலர் மீண்டு வந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில்இ உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 87 லட்சத்து 30 ஆயிரத்தை கடந்துள்ளது. 

தற்போதைய நிலவரப்படிஇ 1 கோடியே 46 லட்சத்து 33 ஆயிரத்து 412 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 52 லட்சத்து 94 ஆயிரத்து 707 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 59 ஆயிரத்து 878 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா தாக்குதலுக்கு இதுவரை 6 லட்சத்து 8 ஆயிரத்து 542 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆனாலும்இ உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 87 லட்சத்து 30 ஆயிரத்து 163 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

கொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகள்:-

அமெரிக்கா - 1802338
பிரேசில் - 1371229
இந்தியா - 677423   
ரஷியா - 550344
சிலி - 301794
பெரு - 241955
ஈரான் - 237788
மெக்சிகோ - 213794
துருக்கி - 202010

0/Post a Comment/Comments

Previous Post Next Post