தேர்தலை கண்காணிக்க இலங்கைக்கு வரவிருந்த ஐரோப்பிய கண்காணிப்பு குழுவின் பயணம் ரத்து - Yarl Voice தேர்தலை கண்காணிக்க இலங்கைக்கு வரவிருந்த ஐரோப்பிய கண்காணிப்பு குழுவின் பயணம் ரத்து - Yarl Voice

தேர்தலை கண்காணிக்க இலங்கைக்கு வரவிருந்த ஐரோப்பிய கண்காணிப்பு குழுவின் பயணம் ரத்து

இலங்கையின் 2020ஆம் ஆண்டின் நாடாளுமன்றத் தேர்தலை கண்காணிப்பதற்காக வருகைதரவிருந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழு தனது பயணத்தை இறுதி நேரத்தில் இரத்துச் செய்வதாக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளனர்.

இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் 5ம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் அதனை கண்காணிப்பதற்காக பலர் விருப்பம் தெரிவித்த போதிலும் கொரோனா தடுப்பு நிலையின் கீழ் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்கும் நடைமுறையினால் பலரின் வருகை தடைப்படக்கூடும் என ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் முதலாவது அணி கடந்த 18ம் திகதி நாட்டிற்குள் வருகை தருவதாக அறிவித்தனர்.

இவ்வாறு வருகை தரும் முதலாவது அணியில் 4பேர் மட்டுமே வருகை தர இணங்கியதோடு 14 நாட்கள் தனிமைப்படுத்தளிற்கு உட்பட்டு எதிர் வரும் 1ம் திகதிமுதல் கண்காணிப்பில் ஈடுபடவும் இணக்கம் கானப்பட்டது. இதேபோன்று மேலும் ஒரு அணி தாய்லாந்தில் இருந்தும் வருகை தருவார்கள் எனக்கூறப்பட்ட நிலையில் நேற்றைய தினம் வருகைதரவிருந்த ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த நால்வரும் தமது பயணத்தை இரத்துச் செய்துள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post