இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு ஊடுருவல் - கடற்படை விடுத்துள்ள எச்சரிக்கை - Yarl Voice இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு ஊடுருவல் - கடற்படை விடுத்துள்ள எச்சரிக்கை - Yarl Voice

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு ஊடுருவல் - கடற்படை விடுத்துள்ள எச்சரிக்கை

வடக்கு கடற் படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில்  கடற்கரையினை அண்டி வாழும் மக்களுக்கு கொரோனா நோய் தாக்கம்பற்றிய  விழிப்புணர்வு செயற்பாடுகள் கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது 

வடக்கில்  முக்கியமான கடற்கரையை அண்டிய பகுதிகளில் விழிப்புணர்வு செயற்பாடுகள் கடற்படையினர் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது 

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு  வருகை தருவோர் மூலம் வடக்கில் கொரோனாதொற்று ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள்அதிகளவில்  காணப்படுவதன் காரணமாக அதனை தடுக்கும் முகமாக  விழிப்புணர்வு செயற்பாடுகள் கடற்கரையை அண்டிய பகுதிகளில் கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது 

மண்டைதீவு இஅல்லைப்பிட்டி மயிலிட்டிஇ வடமராட்சி கிழக்குஇபோன்ற இடங்களில் கடற்படையினரால் குறித்த விழிப்புணர்வு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது 

இந்தியாவில் கொரோனா  தாக்கம் அதிகளவில் காணப்படுவதன் காரணமாக இந்தியாவிலிருந்து கடல் வழியாக சட்டவிரோதமாக இலங்கை கடற்பரப்புக்குள் வருபவர்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் இதுதொடர்பான தகவல்களை பொதுமக்கள் கடற்படையினருக்கு வழங்க வேண்டுமெனவும் குறித்த விழிப்புணர்வு செயற்பாட்டில் தெரிவிக்கப்படுகின்றது

0/Post a Comment/Comments

Previous Post Next Post