இந்த வருடத்தின் ஏழு மாதத்திற்குள் மட்டும் 2327 kg கஞ்சா வடக்கில் மீட்பு - கடந்த வருடத்திலும் அதிகம் என தகவல் - Yarl Voice இந்த வருடத்தின் ஏழு மாதத்திற்குள் மட்டும் 2327 kg கஞ்சா வடக்கில் மீட்பு - கடந்த வருடத்திலும் அதிகம் என தகவல் - Yarl Voice

இந்த வருடத்தின் ஏழு மாதத்திற்குள் மட்டும் 2327 kg கஞ்சா வடக்கில் மீட்பு - கடந்த வருடத்திலும் அதிகம் என தகவல்

வடக்கில் இவ்வருடம் 2327  kg கஞ்சா போதைபொருள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக வடக்கு கடற்படை கட்டளைத் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன

கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இவ்வருடம் போதைப்பொருள் கடத்தல் வடக்கில் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள வடக்கு கடற்படை கட்டளை தலைமையகம் வடக்கு மாகாணத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இவ்வருடம் அதிகளவிலான போதைப்பொருட்கள் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது

கடந்த 2019ஆம் ஆண்டு 2096 kg கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது எனினும் இவ் வருடம் இன்றையதினம்வரை  2327 மப கஞ்சா போதைப் பொருள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது

 கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இவ்வருடம் போதைப்பொருள் கடத்தல் அதிகரித்துள்ளதை  காணக் கூடியதாக உள்ளது 

எனினும் இது தொடர்பில் சமூக மட்டத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியமான ஒரு விடயமாகும் இதனை கருத்தில் கொண்டு சிவில் அமைப்புக்கள் மத குருமார் மற்றும் சமூக ஆர்வலர்கள்  வடக்கு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த முன்வர வேண்டும் 

ஏனெனில் இளம்  பராயத்தை சேர்ந்தவர்கள் அதாவது கல்வி கற்றுக் கொண்டிருக்கும் இளைஞர்கள் கூடுதலாக இந்த போதைப் பொருளுக்கு அடிமையாகி வருவதை அவதானிக்க முடிகின்றது

 இதுதொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய அவசியம்  அனைத்து சமூக மட்ட பிரதிநிதிகளுக்கும் உள்ளது எனினும் கடற்படையினரால் பல்வேறுபட்ட விழிப்புணர்வு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

 அதேபோல சமூகமட்ட அமைப்புகளும்  போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் விபரீதம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமே போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாவனையை கட்டுப்படுத்த முடியும் எனவடக்கு கடற்படை தலைமையகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது

0/Post a Comment/Comments

Previous Post Next Post