கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வேட்பாளருமாகிய சி.சிறீதரனை ஆதரித்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட தொண்டர்கள் மீது தன்னை முன்னாள் ஈபிடிபி பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரின் ஆதரவாளர் என கூறிக் கொண்ட ஒருவர் தாக்குதல் மேற்கொண்டதுடன்
கூரிய ஆயுதங்களாலும் தாக்க முயன்றுள்ளார் பின்னர் அப் பகுதி வாசிகளின் ஒத்துளைப்புடன் குறித்த பகுதியை விட்டு வெளியேறிய தொண்டர்கள்
குறித்த தாக்குதல் விடயம் தொடர்பில் முறைப்பாடு செய்ய கிளிநொச்சி பொலிஸ் நிலையம் சென்ற குறித்த பரப்புரைக் குழுவின் தொண்டர்கள் இருவரை பொலிசார் தாக்குதல் நடத்திய நபரின் மனைவியை தாக்கியதாக தொலைபேசி மூலம் முறைப்பாடு கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவித்து கைதுசெய்துள்ளனர்
குறித்த விடயம் தொடர்பில் பரப்புரையி ஈடுபட்ட மற்றையவர்களை வினவிய போது
முன்னாள் ஈபிடிபி பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் பொலிஸ் செல்வாக்கினை பயன்படுத்தி போலியான ஒரு முறைப்பாட்டை தொலைபேசி மூலம் வழங்கியதனை தொடர்ந்தே தமது தொண்டர்கள் இருவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தாக்குதல் நடத்திய சந்திரகுமாரின் ஆதரவாளர் பலமுறை ஊர் மக்களுடன் தகராறு மற்றும் தாக்குதல் செய்து பொலிஸ் நிலையம் சென்ற போது தனது மனைவியை தாக்கியதாக பலமுறை முறைப்பாடு செய்து சட்டத்தி வழிப் தப்பியுள்லமையை ஊர் மக்கள் தெளிவு படுத்தியதாகவும் தெரிவித்தனர்
அவர்கள் மேலும் தெரிவிக்கையில்
கோட்டாபாய ஜனதிபதியாகி உள்ள நிலையில் வேட்ப்பாளராக களமிறங்கிய சந்திரகுமார் வேட்ப்பாளராக உள்ள போதே இவ்வாறான அடாவடி மற்றும் செல்வாக்கினை பயன்படுத்தி சட்ட துஸ்பிரயோகங்களை மேற்கொண்டு வருகின்றார் என்றால் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டால் கிளிநொச்சி மன்ணின் நிலமை என்னவாகும் ஆகவே மக்கள் விழிப்படைய வேண்டும் என தெரிவித்தனர்
Post a Comment