சுன்னாகம் பிரதேச சபைத் தவிசாளரை தாக்க முயற்சி - அமர்வில் பெரும் குழப்பம் - Yarl Voice சுன்னாகம் பிரதேச சபைத் தவிசாளரை தாக்க முயற்சி - அமர்வில் பெரும் குழப்பம் - Yarl Voice

சுன்னாகம் பிரதேச சபைத் தவிசாளரை தாக்க முயற்சி - அமர்வில் பெரும் குழப்பம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகையின் கீழுள்ள வலிகாமம் தெற்கு பிரதேச சபையான சுன்னாகம் பிரதேச சபையின் தவிசாளரை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் தாக்க முயன்றதால் சபையில் பெரும் குழப்பம் ஏற்பட்டது.

சபையின் மாதாந்த அமர்வு சபைத் தவிசாளர் கே.தர்சன் தலைமையில் சபை மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதன் போது கடந்த அரசினால் முன்னெடுக்கப்பட்டதொரு திட்டம் குறித்ததான விடயமொன்றின் போதே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

 அதாவது குறித்த திட்டத்திற்கு யாழ்ப்பாணத்தில் அங்கஐன் தலைமையிலான அணியினர் சபைக்கு தெரியாமல் இரவு நேரங்களில் வீதிகளை திறப்பதாகவும் சுதந்திரக் கட்சி மீது  பலராலும் குற்றஞ்சாடு முன்வைக்கப்பட்டது. 

இதன் போது சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் அநாகரிக வார்த்தைப் பிரயோகங்களை பாவித்ததாகவும் சபைத் தவிசாளரை தாக்க முற்பட்டதாகவும் சுதந்திரக் கட்சி தவிர்ந்த ஏனைய அனைத்துக் கட்சி உறுப்பினர்களுமு; குற்றஞ்சாட்டியுள்ளனர்.

சுதந்திரக் கட்சி தவிர்ந்த ஐக்கிய தேசியக் கட்சி கூட;டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஈபிபடிபி இணைந்து குறித்த உறுப்பினரின் செயற்பாட்டிற்கு கண்டனம் வெளியிட்டனர். அத்தோடு நபை மரபை மீறிச் செயற்பட்ட உறுப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்றும் கூட்டாக வலியுறுத்தினர்.
0/Post a Comment/Comments

Previous Post Next Post