கொரோனா தொற்றில் இருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது – மத்திய அரசு - Yarl Voice கொரோனா தொற்றில் இருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது – மத்திய அரசு - Yarl Voice

கொரோனா தொற்றில் இருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது – மத்திய அரசு


இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது.

இதன்படி கொரோனா தொற்றில் இருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கை 61.13 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய அரசு இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “நாடு முழுவதும் கொரோனா  பரிசோதனை ஆய்வகங்களின் எண்ணிக்கையை தொடர்ச்சியாக விரிவுபடுத்தியதன் விளைவாக இந்தியாவில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

இதுவரை 1.02 கோடி மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2.41 இலட்சம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவில் மொத்தம் 1115 பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளன. இதில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்களில் மொத்தமாக  4,39,947  பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் கூடுதலாக 1,80,390 பேர் குணமடைந்துள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post