ஹொங்கொங்கின் பாதுகாப்புச் சட்டம் ‘அழிவையும் இருட்டையும்’ உச்சரிக்கவில்லை: கேரி லாம் கருத்து! - Yarl Voice ஹொங்கொங்கின் பாதுகாப்புச் சட்டம் ‘அழிவையும் இருட்டையும்’ உச்சரிக்கவில்லை: கேரி லாம் கருத்து! - Yarl Voice

ஹொங்கொங்கின் பாதுகாப்புச் சட்டம் ‘அழிவையும் இருட்டையும்’ உச்சரிக்கவில்லை: கேரி லாம் கருத்து!

ஹொங்கொங்கின் தேசிய பாதுகாப்புச் சட்டம் ‘அழிவையும் இருட்டையும்’ உச்சரிக்கவில்லை என நகரத்தின் பெய்ஜிங்கின் ஆதரவுத் தலைவர் கேரி லாம் தெரிவித்துள்ளார்.
இன்று (செவ்வாய்க்கிழமை) வாராந்திர செய்தி மாநாட்டில் உரையாற்றும் போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘நிச்சயமாக, இது ஹொங்கொங்கிற்கு அழிவு மற்றும் இருள் அல்ல. தேசிய பாதுகாப்பு என்பது ஒரு சிவப்பு கோடு ஆகும் அதனை கடக்கக்கூடாது.
மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்த சட்டம் கடுமையானதல்ல. இது ஒரு லேசான சட்டம். அதன் நோக்கம் மற்ற நாடுகளிலும் சீனாவிலும் கூட பரந்த அளவில் இல்லை.
ஆனால், பரவலான அச்சங்களை நான் கவனிக்கவில்லை. கடந்த ஆண்டு நடந்த வன்முறை ஜனநாயக சார்பு போராட்டங்களுக்குப் பிறகு உலகின் பாதுகாப்பான இடங்களில் ஒன்றாக நகரத்தின் நிலையை சட்டம் மீட்டெடுக்கும்’ என கூறினார்.
புதிய சட்டம் கிட்டத்தட்ட 23 ஆண்டுகளுக்கு முன்பு, முன்னாள் பிரித்தானிய காலனியின் வாழ்க்கை முறைக்கு மிகவும் தீவிரமான மாற்றங்களுக்கு களம் அமைக்கிறது என ஹொங்கொங் வாசிகள் அஞ்சுகின்றனர்.
இந்த சட்டம் பிரிவினைவாத மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதையும், ஹொங்கொங்கின் விவகாரங்களில் வெளிநாட்டு தலையீட்டையும் கட்டுப்படுத்தும் நோக்கமாகக் கொண்டது என்று கூறப்படுகிறது.
கடுமையான சிறைத் தண்டனையுடன் பெய்ஜிங்கிற்கு விசுவாசமற்றதாகக் கருதப்படும் எதிர்ப்பாளர்களையும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளையும் குறிவைக்க இது பயன்படுத்தப்படும் என்று விமர்சகர்கள் அஞ்சுகின்றனர்.
சீனாவின் சர்ச்சைக்குரிய பாதுகாப்புச் சட்டம், ஹொங்கொங் மீது புதிய அதிகாரங்களைக் செலுத்தி நகரத்தின் சுதந்திரத்திற்கான அச்சங்களை ஆழமாக்கியுள்ளதாக கூறப்படுகின்றது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post