குருபரனுக்கு எதிரான நடவடிக்கை பேரினவாத நிகழ்ச்சி நிரலே: தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி சாடல்! - Yarl Voice குருபரனுக்கு எதிரான நடவடிக்கை பேரினவாத நிகழ்ச்சி நிரலே: தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி சாடல்! - Yarl Voice

குருபரனுக்கு எதிரான நடவடிக்கை பேரினவாத நிகழ்ச்சி நிரலே: தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி சாடல்!


கலாநிதி- குருபரன் மனித உரிமை வழக்குகளில் நீதிமன்றத்தில் ஈடுபட வேண்டிய செயற்பாடுகளைத் தடுப்பதற்காக ' நல்லாட்சியால் 'குருபரனுக்கெதிராக முதலில் தொழில் தடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இதற்கெதிராக அவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தாலும் அவருக்குச் சாதகமானதொரு தீர்ப்புக் கிடைக்கவில்லை. 

இதனால் தான் இந்த சமூகத்திற்கு சட்டத்தரணி என்ற வகையில் தனது கடமைகளை முன்னெடுத்துச் செல்வதற்காக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர் பதவியைத் துறந்துள்ளார். இதுவொரு மிகவும் துரதிஷ்டவசமானதொரு நிலைமை. 

இது பேரினவாத நிகழ்ச்சி நிரலையே காட்டுகின்றது எனத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் கடிதத்தை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தகுதிவாய்ந்த அதிகாரிக்கு கலைப் பீடாதிபதி மற்றும் சட்டத்துறைத் தலைவர் ஊடாக அனுப்பி வைத்துள்ளார். 

இதுதொடர்பில் கருத்துத் தெரிவித்த போதே தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் வேட்பாளருமான செல்வராசா கயேந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்..

கலாநிதி குமாரவடிவேல் குருபரன் தமிழ்த்தேசியம் சார்ந்த மனிதவுரிமைச் செயற்பாடுகளில் மிகவும் உறுதியாகச் செயற்பட்டு வந்த ஒருவர். அவர் பல்கலைக்கழகத்தில் விரிவுயுரையாளராகவுமிருந்து கொண்டு சட்டத்தரணியாகவும் நீதிமன்றங்களில் பணியாற்றி வந்த ஒருவர்.

மனித உரிமை வழக்குகளில் குறிப்பாக இராணுவத்தினரால் கடத்தப்பட்டஇ காணாமல் ஆக்கப்பட்ட பல வழக்குகளில் அவர் ஆஜராகிச் செயற்பட்டுக் கொண்டிருந்தார். இது அரசாங்கத்திற்குப் பெரும் நெருக்கடியாகவிருந்து வந்தது.

தமிழ்ச் சமூகத்தில் புத்திஜீவிகளாகவிருப்பவர்கள் தமிழர்களுடைய நீதிக்காகச் செயற்படக் கூடாது என்கிற செய்தியைச் சொல்வதாகவே குருபரனுக்கெதிரான நடவடிக்கை அமைந்துள்ளது. எனினும்இ குருபரன் இவற்றிற்கு அடிபணியாமல் உறுதியாக நிற்பது பெருமைக்குரிய விடயம்.

இவ்வாறான செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டுமானால் தமிழர்களுடைய இனப்பிரச்சினைக்குத் தமிழ்த்தேசம் அங்கீகரிக்கப்பட்ட தீர்வு எட்டப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post