சம்மந்தனைத் தவிர மற்றவர்கள் கூட்டமைப்பிலிருந்து வெளியேறி விட்டனர் - சுரேஸ் பிரேமச்சந்திரன் - Yarl Voice சம்மந்தனைத் தவிர மற்றவர்கள் கூட்டமைப்பிலிருந்து வெளியேறி விட்டனர் - சுரேஸ் பிரேமச்சந்திரன் - Yarl Voice

சம்மந்தனைத் தவிர மற்றவர்கள் கூட்டமைப்பிலிருந்து வெளியேறி விட்டனர் - சுரேஸ் பிரேமச்சந்திரன்

கிளிநொச்சியில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் சுரேஸ் பிரேமச்சந்திரன்.........

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருக்கக் கூடிய அனைத்து தரப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகி இன்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி என்ற ஒன்றை உருவாக்கியுள்ளார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்ப காலத்தில் கையொழுத்திட்ட நான்கு பேர்களில் சம்பந்தன், சிறீகாந்தா, குருபரன் மற்றும் நான் இவர்களில் சம்பந்தனைத் தவிர அனைவரும் வெளியேறிவிட்டனர். இன்று இருப்பவர்கள் இடையில் வந்த இணைந்து கொண்ட தமிழரசுக் கட்சி, புளொட்; மற்றும் ரெலோவில் இருந்து சிலர் விலகி அரைகுறையானவர்களே உள்ளார்கள்.

ஆகவே, ஒரு கூட்டணியாக தமிழ் மக்களினுடைய தேசிய இனப் பிரச்சினைகளை தீர்க்க கூடிய வல்லமை கொண்ட கூட்டணியாக இருக்கக் கூடியது எமது கூட்டணியான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியே!

கிளிநொச்சியில் இருந்து அதிக வாக்குகளைப் பெற்று தன்னை தீவிரமான தமிழரின் சுதந்திரத்துக்காக பாடுவடுபராக தன்னைக் காட்டிக் கொள்கின்ற சிறீதரன் இன்றைய சூழலில் ஒரு ரவுடி தனம் வளர்வதற்கு மூல காரணமாக இருக்கின்றார். உருத்திரபுரத்தில் எங்கள் கட்சி சார்பில்  வீட்டுக்கு வீடு பிரசாரம் செய்த பெண்களை மிரட்டி தாங்கள் புலனாய்வு பிரிவினர் என கூறி அவர்களை வேலை செய்ய விடாமல் தடை செய்து ஒரு ரவுடி தனமான செயல்களில் ஈடுபட்டு வாக்குகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்ற நிலையில் தான் இன்று சிறீதரன் இருக்கின்றார்.  சுமந்திரன் கூறுகின்றார் வேலை இல்லாமல் இருந்தார்கள் தான் போராளிகளாக போய் போராடினார்கள் என்று கூறுகின்றார். இப்படியான ஒருவருடன் தான் இன்று கூட்டு சேர்ந்திருக்கின்றார் சிறீதரன்.  

அதாவது, சுமந்திரன் போன்ற அறிவாளி எமக்குத்தேவை, சுமந்திரன் போன்ற அறிவாளி எங்களது மண்ணில் இருக்கிறாரா? இருந்தால் காட்டுங்கள் பார்க்கலாம் என்றும் சுமந்திரன் போன்ற அறிவாளி பாலசிங்கத்துக்கு நிகரானவர். பாலசிங்கம் விடுதலைப்புலிகள் கவிழ்ந்த நேரங்களில் நிமிர நிமிர உதவி செய்தார். அதேபோல் ஒருவர்தான் சுமந்திரன் என்று கூறுகின்றார். சுமந்திரன் தோற்கடிக்கப்பட்டால் அல்லது அவருக்கு ஆதரவளித்தற்கான நான் தோற்கடிக்கப்பட்டால் அந்த வரலாற்றுத் தோல்வி ஏற்பதாகக் கூறியிருந்தார். தமிழ் மக்களுடைய வாக்குகளை பெறுவதற்கு கூட்டுக் களவாணிகளாக இவர்கள் இருவரும் செயற்பட்டுக் கொண்டு இருக்கின்றார்கள்.

பாராளுமன்ற தேர்தலில் முதன் முறையாக வந்த போது வட்டக்கட்சியில் ஒரு வீடு இருந்திருக்கலாம். ஆனால், இன்று அவரது சொத்து நிலவரங்கள் என்ன? யாழ்ப்பாணம் - நல்லூரில் வீடு, யாழ்ப்பாண நகரத்துக்குள் வீடு, கிளிநொச்சியில் எத்தனையோ கோடிகளுக்கு மேலான சொத்துக்கள் இவை அனைத்தும் இந்த இடைக்காலத்தில் எவ்வாறு வந்து சேர்ந்தது. எந்த அடிப்படையில் வந்து சேர்ந்தது. நிச்சயமாக அவர்கள் அரசாங்கத்துக்கு சார்பாக நடந்து, அரசாங்கத்துக்கு ஆதரவாக செயற்பட்டு, அரசாங்கத்தை கவிழவிடாமல் பாதுகாத்து செயற்பட்ட படியால் தான் இன்று பல கோடிகளுக்கு அதிபதியாக உள்ளார்கள். ஒரு காலத்தில் சிறீதன் சுமந்திரனை கார சாரமாக விமர்சித்தார். இன்று அறிவாளியாகத் தெரிகின்றார்.

ஆகவே, இவ்வாறானவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக வருவார்களாக இருந்தால் இந்த மண் இன்னும் பல மோசமான விளைவுகளை சந்திக்கும். இந்த மண் ஒரு உரிமைக்காகப் போராடிய மண். பல ஆயிரம் போராளிகளை இழந்த மண், போராட்டத்துக்கு பல ஆயிரம் பேரை கொடுத்த மண் இப்படியான ஒரு மண்ணில் இருந்து கொண்டு  அரசாங்கத்துக்கு வால் ஆட்டக் கூடிய, அரசாங்கம் போடுகின்ற எலும்புத்துண்டுகளை நக்கக் கூடியவர்களை மீண்டும் நாடாளுமன்றம் அனுப்புவீர்களாக இருந்தால் அடுத்த ஐந்து வருட காலத்திற்கு அதனை மாற்ற முடியாது.

ஆகவே, நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இனிமேல் நடக்கப்போவது சரியாக இருக்கட்டும். இந்த மண் கொடுத்த விலைக்கு ஒரு சரியான தீர்ப்பு எமது தமிழ் மக்களுக்கு கிடைத்தாக வேண்டும். கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா போன்ற இடங்களில் உள்ள தாய்மார்கள் காணாமற்போன தங்களுடைய பிள்ளைகளுக்கான 1200 நாட்களுக்கு மேலாகப் போராடிக் கொண்டு இருக்கின்றார்கள். இவர்கள் தொடர்பாக ஒரு சிறிய அக்கறை கூட காட்டாதவர்கள், அவர்களுடைய பிரச்சினைகளை உலகத்துக்கு எடுத்துச் சென்று தீர்க்க முடியாதவர்கள் இன்று தாங்கள் பாராளுமன்றம் சென்று அமைச்சுப் பதவிகளைப் பெற்று உங்களுக்கு அபிவிருத்தி செய்வதாகக் கூறுகின்றார்கள்.

இன்று இருக்கின்ற டக்ளஸ்தேவானந்தா, அங்கஜன் ராமநாதன், சந்திரகுமார்;, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கக் கூடியவர்கள் அரசாங்கத்துக்கு காவடி தூக்கக் கூடியவர்களாகவும்  அரசாங்கத்தைப் பாதுகாக்கக் கூடியவர்களாகவும், சிங்கள் பௌத்த மேலாதிக்க சக்திகளுக்கு ஆதரவு கொடுப்பவர்களாகத்தான் இருக்கின்றார்கள். இந்த நிலைமை தமிழ் மக்கள் எதிர் நோக்க கூடிய ஒரு பாரதூரமான நிலைமை ஆகும்.

இவர்கள் தமிழ் மக்களினுடைய பிரச்சினைகளை வெளிநாடுகளுக்கு கொண்டு செல்ல விடாது எதிர்த்து கொண்டு இருந்தவர்கள். ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்துக்குக் கூட இனப்படுகொலை என்ற விடயத்தை கொண்டு போகக் கூடாது என்று இருந்தவர்கள். இப்படியானவர்களை எமது பிரதேசத்தில் இருந்து விரட்டி நீதியரசர் தலைமையிலான எமது கட்சி மீன் சின்னத்தில் போட்டியிடுகின்றது. சரியாக முடிவை சரியான நேரத்தில் எடுங்கள் என்று கூறினார்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post