யாழ் மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும் - அரசிற்கு ஆதரவை வழங்க வேண்டும் - Yarl Voice யாழ் மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும் - அரசிற்கு ஆதரவை வழங்க வேண்டும் - Yarl Voice

யாழ் மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும் - அரசிற்கு ஆதரவை வழங்க வேண்டும்



யாழ் மக்கள் எதிர்நோக்கி வருகின்ற பிரச்சனைகள் தேவைகள் மற்றும் சமகால நிலைமைகள் குறித்து பிரதமர் மகிந்த ராஐபக்சவின் கவனத்திற்குn hகண்டு செல்வதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மத விவகாரங்களுக்கான இணைப்புச் செயலாளர் வண பிதா எஸ்.சந்திரகுமார் யாழில் வைத்து தெரிவித்துள்ளார்.

அமைச்சர் வாசுதேவவின் யாழிலுள்ள கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.


யாழ்ப்பாணத்திற்கு இன்று விஐயமொன்றை மேற்கொண்டிருந்த அவர் இன்று காலை hழ் ஆயர் இல்லத்தில் ஆயர் ஐஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகைகயைச் சந்தித்து கலந்துரையாடினார். இதன் போது மதங்களுக்கிடையிலான ஒற்றுமையை வலியுறுத்திய ஆயர் இளைஞர் யுவதிகளுக்கான வேலை வாய்ப்பு தொடர்பிலும் எடுத்துக் கூறியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் வாசுதேவ நாணயக் காரவின் ஐனநாயக இடதுசாரி முன்னியின் சார்பில் யாழ் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை அக் கட்சியில் யாழிலுள்ள அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இதன் போது அக் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிடுகின்ற டேவிட் நவரட்னராஐh மற்றும் பிரதமரின் இணைப்புச் செயலாளர் ஆகியோர் இணைந்து ஊடக சந்திப்பொன்றையும் நடாத்தியிருந்தனர். 

மேலும் இதன் போது அக் கட்சியின் உறுப்பினர்களால் பிரதமரின் செயலாளருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிப்பும் இடம்பெற்றது.



0/Post a Comment/Comments

Previous Post Next Post