சரியானவர்களைத் தெரிவு செய்ய அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் - யாழ் ஆயர் கோரிக்கை - Yarl Voice சரியானவர்களைத் தெரிவு செய்ய அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் - யாழ் ஆயர் கோரிக்கை - Yarl Voice

சரியானவர்களைத் தெரிவு செய்ய அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் - யாழ் ஆயர் கோரிக்கை

கொரோணா என்ற அச்சமில்லாது அனைத்து மக்களும் வாக்களிக்குமாறு யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் கோரிக்கை விடுத்துள்ளார்.

  எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் மக்களுக்கு என்ன கூற விரும்புகிறீர்கள் என ஊடகவியலாளர்களின்   கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் 

எதிர்வரும் 5 ம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றதேர்தலில் நாம் அனைவரும்எமது  வாக்குரிமையை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

 நீங்கள் உங்களுக்கு சேவை செய்யக் கூடிய  சரியானவர்களை பாராளுமன்றம் அனுப்ப நீங்கள் கட்டாயம்  தேர்தலில் பங்குபற்ற வேண்டும் என தெரிவித்த ஆயர் .

கொரோணா  என்று பயப்படாமல் தங்களுக்குரிய  இந்த வாக்களிக்கும் வாய்ப்பினை  பாவித்து எங்கள் உரிமையை நிலைநாட்ட வேண்டுமெனவும் ஆயர் தெரிவித்தார் 

0/Post a Comment/Comments

Previous Post Next Post