மாற்று அணி என்று ஒன்றும் இல்லை, அவை ஒரு ஆசனத்திற்காக போட்டியிடும் அணிகள் - சுமந்திரன் சாடல் - Yarl Voice மாற்று அணி என்று ஒன்றும் இல்லை, அவை ஒரு ஆசனத்திற்காக போட்டியிடும் அணிகள் - சுமந்திரன் சாடல் - Yarl Voice

மாற்று அணி என்று ஒன்றும் இல்லை, அவை ஒரு ஆசனத்திற்காக போட்டியிடும் அணிகள் - சுமந்திரன் சாடல்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பலத்தைக் குறைத்து வாக்கைச் சிதறடிப்பதற்காகவே பல கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் யாழில் களமிறக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள மக்களின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் வேட்பாளருமான எம்.ஏ.சுமந்திரன் மாற்று என்ற ஒன்றும் இல்லை என்று அவர்கள் ஒரு ஆசனத்திற்காக போட்டியிடுபவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஆசனங்களுக்காக கூட்டமைப்பிலிருந்து வெளியெறியவர்கள் இன்று கொள்கைக்காக வெளியேறியதாக கூறிவருவதாகவும் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியவர்களுக்கு தமிழ் மக்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஆதரவளித்தது கிடையாது என்றும் அதே போன்றெ இந்தத் தேர்தலிலும் அவர்களுக்கு மக்கள் ஆதரவு வழங்க மாட்டார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சுமகால நிலைமைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது..

யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் பல அரசியல் கட்சிகள் பல சுயேட்சைக் குழுக்கள் தேர்தலில் போட்டியிடப் பண்ணப்பட்டிருக்கின்றன. இது ஒரு பழைமையான ஒரு திட்டம். முன்னரும் இது போன்று நடாத்தப்பட்டிருக்கின்றது. அரசில் ஆட்சியில் இருக்கிறவர்கள் செய்கிற ஒரு அனுகுமுறை தான் இது. அதாவது மக்களின் வாக்குகளை சிதறடிப்பதற்குமு; பிரிப்பதற்குமாக இந்த அனுகுமுறை செய்யப்படுகிறது. 

குறிப்பாக இந்த ஏராளமான சுயேட்சைக் குழுக்களும் சில அரசியல் கட்சிகளும் தேர்தலில் வெல்வது அவர்களது நோக்கமே அல்ல. அது அவர்களுக்கும் தெரியும். எல்லாருக்கும்; தெரியும். கடைசி வரைக்கும் அவர்கள் ஒரு ஆசனம் கூட பெற முடியாது. அப்படியிருக்கத்தக்கதாக தேர்தலில் போட்டியிடுவதென்பது வேறறொரு நோக்கத்திற்காக செய்யப் படுகிறதென்பது எல்லாருக்கும் தெரிந்த விடயம். 

ஆதன் நோக்கமொன்னவென்றால் இந்தத் தேர்தல் மாவட்டத்தில் பலமாக இருக்கிற கட்சியை பலவீனப்படுத்துவதற்கான ஒரு முயற்சி தான். அதை இத்தனை பேர் சேர்ந்து வந்து 200 இற்கும் மேற்பட்டவர்கள் தாங்கள் வேட்பாளர்கள் என்று அறிவித்து இதைச் செய்வதாக இருந்தால் அவர்களுக்கு அதற்குரிய சன்மானம் கொடுக்கப்பட்டிருக்கின்றது. ஆனபடியினால் காசிற்காக இதைச் செய்கிறார்கள். 

இவ்வளவு அதிகமான பணம் இதற்கே செலவிடப்படுகின்றதென்று சொன்னால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடைய பலத்தைக் குறைப்பதற்காக பல்வெறு வழிகளில் ஏராளமான பணம் செலவிடப்பட்டு அதில் பல ஊடகங்களும் அதற்குத் துணை போய் மக்களைக் குழப்புகிற ஒரு வேலையொன்று நடந்து கொண்டிருக்கிறது. 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பொறுத்தவரையில் அந்தக் குழப்பங்களில் இரந்த மக்களைத் தெளிவு பெற வைக்கிற ஒரே ஒரு வேலையைத் தான் நாங்கள் செய்ய வேண்டியிரக்கிறது. ஆதைச் செய்தால் மக்கள் நிதானமாக சிந்தித்து சரியான முறையில் கூட்டமைப்பிற்கு வாக்களிப்பார்கள் என்பது எங்களுடைய நம்பிக்கை. 

இந்தத் தேர்தலிலும் கூட்;டமைப்பில் இருந்து பிரிந்து நின்று சிலர் போட்டியிடுகின்றனர். அவ்வாறு பிரிந்து நின்று தேர்தல் கேட்பது இந்த முறை மட்டும் நடப்பதில்லை. கடந்த 2010 ஆண்டே கூட்டமைப்பில் இருந்த ஒரு அங்கத்தவக் கட்சி பிரிந்து தனியாகத் தேர்தலில் போட்டியிட்டது. சுpறிகாந்தா சிவாஐpலிங்கமும் பிரிந்து தனியாக தேர்தலில் போட்டியிட்டார்கள். ஆகவே 2010 ஆம் ஆண்டு தேர்தல் அறிவித்த பிறகு பிரிந்து போன தரப்புக்கள் அவர்கள். ஆனபடியால் இதுவொன்றும் இப்ப புதுவிசயம் இல்லை. 

இந்த முறை சுரேஸ்பிரேமச் சந்திரனும் விக்கினேஸ்வரனும் பிரிந்து போய் இருக்கிறார்கள். அவ்வளவு தான் வித்தியாசம். கூட்டமைப்பில் இருந்த பிரிந்து போனவர்களுக்கு தமிழ் மக்கள் எந்தக் காலத்திலையும் வாக்களித்தது கிடையாது. 

அது கNஐந்திரகுமார் பொன்னம்பலமாக இருக்கட்டும் கடந்த தேர்தலில் பிரிந்து போகப் போகிறார்கள் என்று அவர்கள் சந்தேகித்த சுரேஸ் பிரேமச்சந்திரனாக இருக்கட்டும் சிறிகாந்தா சிவாஐpலிங்கம் கூட்டாக இருக்கட்டும் எவருக்கும் தமிழ் மக்கள் வாக்களித்தது கிடையாது. அதே போல் இந்தத் தடவையும் கூட்டமைப்பில் இருந்த பிரிந்து போனவர்களுக்கு நிச்சமாக மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். 

மேலும் தேர்தலில்ன் பினினர் தமிழர் தரப்பாக அனைவரையும் இணைத்து ஒருமித்துச் செயற்படுவதென்பது கூட மக்கள் வாக்களிக்கிறதைப் பொறுத்து நாங்கள் அதனைச் செய்யலாம். மக்கள் அவர்களுக்கு ஒரு சிறிய அங்கிகாரம் கொடுப்பார்களாக இருந்தால் நாங்கள் அவர்களை நிச்சமாகச் சேர்த்து இயங்குவோம். ஆனால் மக்கள் அவர்களை நிராகரித்தால் மக்கள் நிராகரித்தவர்களை நாங்கள் சேர்த்து வைக்க வேண்டிய தேவை இருக்காது என்றார்.

இதே வேளை கூட்டமைப்பு கொள்கையிலிருந்த தவறிவிட்டது என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் அவர்கள் எல்லாருமே கூட்டமைப்போடு சேர்ந்திருந்தவர்கள். எந்தக் கொள்கை காரணமாகவும் அவர்கள் விலகிப் போனவர்கள் அல்ல. குறிப்பாக கNஐந்திரகுமார் அணி 2010 ஆம் ஆண்டு ஆசனப் பங்கீடு காரணமாக விலகிப் போனாவர்கள். வேறு எந்தக் கொள்கை காரணமாகவும் வலகிப் போனவர்கள் அல்லர். அது எல்லாருக்கும் தெரிந்த விடயம். 

அதே போல 2015 ஆம் ஆண்டு சுரேஸ் பிரேமச்சந்திரன் அணி எங்களோடு சேர்ந்து தான் போட்டியிட்டது. ஆகவே அவர்களுக்கும் வேறு எந்தக் கொள்கை மர்றுபாடும் அங்கு இருக்கவில்லை. ஆனால் அவர் மிக மோசமாக தேர்தலில் தோல்வியடைந்த பிறகு தனக்குத் தேசிய பட்டியல் ஆசனம் வேண்டுமென்று கேட்டிருந்தார் ஆயினும் அது கொடக்க முடியவில்லை. 

மக்களாகத் தேர்ந்து எடுக்கபப்படாமல் அவரைத் தோற்கடிக்கப்பட்ட பின்பு அவரை தேசிய பட்டியல் மூலமாக பாராளுமன்றம் கொண்டு வர முடியாது. ஆகையினால் அதைக் கொடுக்கவில்லை என்பதற்காக விலகிப் போனர் தான் அவர். ஆக அவர்கள் இரவரும் ஆசனத்திற்காக விலகிப் போனர்கள். 

விக்கினெஸ்வரைனைப் போறுத்தவரையில் அவர் எங்களுக்கு முரணாகச் செயற்பட ஆரம்பித்த பிறகு அதைக் குறித்து நாங்கள் பேசிய போதெல்லாம் கூட்டபை;பின் தேர்தல் விஞ:ஞாபன அறிக்கையின் படியே நான் நடக்கிறேன் என்பது தான் அவருடைய பதிலாக இருந்தது. 2013 ஆம் ஆண்டு; தேர்தல் விஞ:ஞர்பனத்தின் படியே நான் ஒழுகிகறேன் அதையே கடைப்பிடிக்கிறேன் என்று தான் சொன்னர். 

ஆக எங்கடைய கொள்கையின் படி தான் செயற்படுகிறேன் கடைப்பிடிக்கிறேன் என்று தான் சொல்லியிருக்கிறார். அப்படியானால் ஏன் தன்னுடைய பதவிக் காலம் முடிந்து மறு நாள் புதுக் கட்சியை தொடங்கினார் என்பது ஒருதருக்கும் தெரியாது. 

ஆக பதவிக் காலம் இருக்கிற வரைக்கும் கூட்டமைப்பின் முதலமைச்சராகத் தான் இருந்தவர். ஒரு கொள்கை வித்தியாசமும் அவருக்கு தெரியவில்லை. அவராகவே இதே கொள்கையில் தான் இருக்கிறேன் என்று சொல்கிறார். ஓர் இரவில் அவரின் கொள்கை மாறியது ஏன் என்று தெரியவில்லை. என்ன மாறான கொள்கை என்று இன்னும் ஒருதருக்குமு; தெரியாது. அவருக்கும் தெரியாது. 

ஆனபடியினால் இந்த மாற்று அணியென்று போகிறவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு ஒரு ஆசனத்திற்காகவே தான். குறிப்பாக கNஐந்திரகுhர் ஒரு ஆசனத்திற்காக அதிலும் சுரேசிற்கு அதுவும் வசதியில்லை. ஏனெ;னறால் விக்கினேஸ்வரன் அணியில் சேர்ந்திருக்கிறார். அங்கு ஒரு ஆசனம் கிடைத்தால் அது விக்கினேஸ்வரனிற்கு தான் கிடைக்கும். ஆனபடியால் ஏன் அங்கு போய் நிற்கின்றாரோ தெரியவில்லை. எல்லாருமே ஒரு ஆசத்தைப் பெறுவதற்காக நிற்கின்றவர்கள். ஆனபடியால் அவர்களை மாற்று அணியென்று வர்ணிக்க முடியாது. 

0/Post a Comment/Comments

Previous Post Next Post