விரிவுரையாளர் பதவியை இராஜினாமா செய்த குருபரன் - Yarl Voice விரிவுரையாளர் பதவியை இராஜினாமா செய்த குருபரன் - Yarl Voice

விரிவுரையாளர் பதவியை இராஜினாமா செய்த குருபரன்

யாழ் பல்கலைக்கழக சட்டத்துறை விரிவுரையாளரும் , சிவில் சமூக செயல்பாட்டாளருமான குமாரவடிவேல் குருபரன் தனது விரிவுரையாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்

விரிவுரையாளராக இருக்கும் அவர் கடமை நேரத்தில் சமூகநலன் சார்ந்த வழக்குக்களில் ஈடுபட்டார் என்கிற குற்ற சாட்டு வந்ததை தொடர்ந்து பல்கலை கழக மானியங்கள் ஆணைக்குழு அவருக்கு வழக்குகளில் வாதாடுவதற்கு தடை விதித்திருந்தது

அந்த தடையை எதிர்த்து மனு தாக்குதல் செய்திருந்தார் குருபரன் . அந்த மனுவின் மீதான விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே விசாரிக்க என்று நியமிக்கப்பட்ட ஒரு நீதிபதி அந்த குழுவிலிருந்து தன்னிச்சையாக விலகி கொண்டார் 

அதன் பின்னரஇன்னொரு நீதிபதியும் " விரிவுரையாளர் ஒருவர் வழக்குகளில் வாதாட கூடாது என்று சொல்வது எனது மனசாட்சிக்கு விரோதமானது " என்று கூறி விலகி இருந்தார் 

எனினும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு விடாப்பிடியாக நின்றது . ஒன்றில் விரிவுரையாளராக இருக்கலாம் . அல்லது வழக்கறிஞராக இருக்கலாம் என்று கூறியது

இந்நிலையில் இன்றய தினம் தனது விரிவுரையார் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்

'சட்டத் தொழிலில் ஈடுபடுவது கூடிய வருமானத்தை தரும் என்ற காரணத்திற்காக தான் இந்த முடிவை எடுக்கவில்லை என்றும் அவ்வாறாக எடுப்பதாயின் தான் அதனை 2010யிலேயே அந்த முடிவை எடுத்திருந்துப்பேன் என்றும், வகுப்பறையில் மட்டும் முடங்கியிருக்கும் ஆசிரியராக கடமையாற்ற தான் தயாரில்லை என்றும் இன்னும் பல விடயங்களை குறிப்பிட்டும் தனது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்துள்ளார்

0/Post a Comment/Comments

Previous Post Next Post