படையினரிடமிருந்து விடுவிக்கப்பட்ட மயிலிட்டி பிரதேசத்தில் புனரமைக்கப்பட்ட கட்டிடம் திறப்பு - Yarl Voice படையினரிடமிருந்து விடுவிக்கப்பட்ட மயிலிட்டி பிரதேசத்தில் புனரமைக்கப்பட்ட கட்டிடம் திறப்பு - Yarl Voice

படையினரிடமிருந்து விடுவிக்கப்பட்ட மயிலிட்டி பிரதேசத்தில் புனரமைக்கப்பட்ட கட்டிடம் திறப்பு


வலிகாமம் வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட தெல்லிப்பளை பிரதேச செயலகத்துக்குட்பட்ட  கட்டுவன், மயிலிட்டி தெற்கு ஞானோதய வித்தியாலயம்  புனரமைக்கப்பட்டு புதிய கட்டடம்  வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.  . இந்நிகழ்வு இன்று (17) பிற்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றது.

இந்நிகழ்வு பாடசாலை அதிபர்  பாடசாலை அதிபர் திரு.தி.ஸ்ரீதரன் அவர்கள் தலைமையில் ஆரம்பமான இந்நிகழ்வில்  கௌரவ விருந்தினராக கலந்துகொண்ட  வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ்  அவர்களால் வைபவ ரீதியாக பாடசாலை நினைவுக் கல்லினை திரைநீக்கம் செய்து வைத்ததுடன் பாடசாலை கட்டடத்தினை திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில்  கல்வி அமைச்சின் செயலாளர் எல். இளங்கோவன்,  வடமாகாண பிரதம செயலாளர் அ.பத்திநாதன், வடமாகாண கல்வி.பணிப்பாளர் எஸ் .உதயகுமார். மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.முரளி தரன், வலிகாமம் வடக்க பிரதேச சபை செயலர் ச.சிவஸ்ரீ, மயிலிட்டி தெற்கு கிராம சேவையாளர், சமுர்த்தி உத்தியோகத்தர், பாடசாலை மாணவர்கள் , பெற்றோர்கள், பாடசாலை பழைய மாணவர்கள் , என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இதேவேளை இப்பாடசாலையில் ஐக்கிய ராச்சியக் கிளையினரின் நிதிப்பங்களிப்பில் உயர்மட்ட கற்றல் கற்பித்தல் செயற்பாட்டு அலகு (Smart class room) அமைக்கப்பட்டுள்ளது.   வைப ரீதியாக இந்த வகுப்பறை பாடசாலை திறப்பு விழாவான இன்று பாடசாலை நிர்வாகத்தினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.   

இப்பாடசாலை கடந்த அரசின் ஆட்சியில் இராணுவ கட்டுப்பாட்டில்  இருந்து  ஏப்ரல் 13 .2018  இல்  விடுவிக்கபட்டமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post