கெரோயின் கடத்திச் சென்ற ஓட்டோவை மடக்கி பிடித்த மதுவரித் திணைக்கள அதிகாரிகள் - Yarl Voice கெரோயின் கடத்திச் சென்ற ஓட்டோவை மடக்கி பிடித்த மதுவரித் திணைக்கள அதிகாரிகள் - Yarl Voice

கெரோயின் கடத்திச் சென்ற ஓட்டோவை மடக்கி பிடித்த மதுவரித் திணைக்கள அதிகாரிகள்


ஓட்டோவில் மறைத்துக்கொண்டு செல்லப்பட்ட சுமார் ஒரு லட்சத்து எண்பதாயிரம் ரூபா பெறுமதியான 15 கிராம் ஹெராயின் போதைப் பவுடர் சாவகச்சேரி  மதுவரி நிலைய உத்தியோகத்தர்களால் பிடிக்கப்பட்டது.

சவகச்சேரி நகரப்பகுதி ஊடாக ஓட்டோவில் கடத்திச் செல்லப்பட்ட வேளையில் மதுவரி நிலையத்தினர் போதைப் பொருளைக் கைப்பற்றியதுடன் ஓட்டோவில் சென்ற நபரையும் கைது செய்துள்ளனர்.

சாவகச்சேரி நகர் ஊடாக போதைப்பவுடர் ஓட்டோவில் கடத்தப்படுவதை கிடைத்த தகவலையடுத்து சாவகச்சேரி  மதுவரி நிலைய பொறுப்பதிகாரி இந்திக்க பிரியந்த தலைமையில் சென்ற  மதுவரி நிலையத்தினர் ஏ 9  வீதி ஊடாக வந்த ஓட்டோவை மறித்து சோதனையிட்ட பொது  மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டிருந்தர். இவர்கள் சாவகச்சேரி நீதிமன்றில் முற்படுத்தவுள்ளனர் எனவும் தெரிவித்தனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post